Home /News /international /

ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் பயங்கர குண்டுவெடிப்பு... மதகுரு உட்பட 18 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மசூதிக்குள் பயங்கர குண்டுவெடிப்பு... மதகுரு உட்பட 18 பேர் பலி

மாதிரி படம்

மாதிரி படம்

குண்டுவெடிக்கப்பட்ட மசூதியைச் சுற்றி ரத்தக் கறை படிந்த உடல்களின் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பயங்கர சம்பவத்தை நேரில் கண்ட பலர் பயந்து பொய் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaAfghanistanAfghanistanAfghanistanAfghanistan
    மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்கு ஏராளமானோர் கூடிய நேரத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

    இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா மோடவாகல் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பயங்கர தாக்குதலில் தலிபான் மதகுரு உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்” என குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

    குண்டுவெடிக்கப்பட்ட மசூதியைச் சுற்றி ரத்தக் கறை படிந்த உடல்களின் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பயங்கர சம்பவத்தை நேரில் கண்ட பலர் பயந்து போய் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சிக்கு திரும்பியதில் இருந்து வன்முறை குறைந்துள்ளது, ஆனால் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. பல ஜிஹாதிஸ்ட் இஸ்லாமிய அரசு (IS) குழுவால் சமீபத்திய மாதங்களில் சில சிறுபான்மை சமூகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.

    Also Read : வெள்ளம் பாதித்த பாகிஸ்தான் பகுதிகளுக்கு உதவ இந்தியா தயார் - வெளியுறவுத்துறை அமைச்சகம்

    இந்த குண்டுவெடிப்பில் முஜிப் உர் ரஹ்மான் அன்சாரி கொல்லப்பட்டதை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிப்படுத்தினார். அன்சாரி தன்னுடைய அனல் பறக்கும் பேச்சுகளுக்கு பெயர் போனவர். மேலும் மிகுந்த செல்வாக்கு மிக்க மதகுரு ஆவார்.

    "நாட்டின் வலிமையான மற்றும் தைரியமான மத அறிஞர் ஒரு மிருகத்தனமான தாக்குதலால் தியாகியாக்கப்பட்டுள்ளார்" என்று அவர் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஜூலை மாதம், காபூலில் ஒரு மதக் கூட்டத்தின் போது அன்சாரி “நமது இஸ்லாமிய அரசுக்கு எதிராகச் சிறிய செயலைச் செய்பவர்களின் தலை துண்டிக்கப்பட வேண்டும். இந்த (தலிபான்) கொடி எளிதில் உயர்த்தப்படவில்லை, மேலும் இது எளிதில் குறைக்கப்படாது” என அவர் கூறியிருந்தார்.
    Published by:Josephine Aarthy
    First published:

    Tags: Afghanistan, Bomb blast, Mosque

    அடுத்த செய்தி