ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - ஆயிரத்தை நெருக்கியது பலி எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - ஆயிரத்தை நெருக்கியது பலி எண்ணிக்கை

நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டடங்கள்

நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டடங்கள்

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மவ்லாவி ஷபருதின் அளித்த தகவின் படி, இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளனர். 610க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆப்கான் மதிப்பில் ஒரு லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 நிதியுதவியும் வழங்கப்படும்.மேலும் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் எனவும் தாலிபான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் என்ற நகரத்தின் அருகே நேற்று நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் பாகிஸ்தான் நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 500 கிமீ சுற்றளவுக்கு உணரப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெராஷ் ஷெரிப், தங்களால் இயன்ற உதவியை வழங்குவோம் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: தொழிலதிபர் வாரன் பஃபெட்டுன் ஒரு வேளை சாப்பிடுவதற்கு ரூ.148 கோடி - அது என்ன பவர் லன்ச்?

இந்துகுஷ் மலைத்தொடரைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற நிலநடுக்கம், நில அதிர்வு சம்பவங்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. 2015ஆம் ஆண்டு அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோரும், 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,500க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

First published:

Tags: Afghanistan, Disasters, Earthquake