• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பியோட்டம்! - தலிபான் ஆட்சியை பிடிக்கிறது!

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பியோட்டம்! - தலிபான் ஆட்சியை பிடிக்கிறது!

அஷ்ரப் கானி

அஷ்ரப் கானி

காபுல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை அஷ்ரப் கானி ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்திருக்கிறது.

  • Share this:
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்க படைகள் சொந்த நாட்டிற்கு திரும்புவதாக முடிவெடுத்து வெளியேறியத் தொடங்கின. இதனையடுத்து அங்கு அரசுக்கு எதிராக போராடி வந்த தலிபான்கள் கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலிபான்கள் கை ஓங்கிய நிலையில் அரசுப் படைகளுக்கு பின் வாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

கடந்த சில நாட்களில் முக்கிய மாகாண தலைநகரங்களை வசப்படுத்திய தலிபான்கள் இன்று தலைநகர் காபுலை சுற்றி வளைத்தனர். இதன் காரணமாக அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க தூதரக அலுவலர்களை அந்நாட்டு அரசுப் படை பத்திரமாக மீட்டுச் சென்றது. இதே போல இந்தியா போன்ற நாடுகளும் தங்களின் தூதரக அதிகாரிகளை மீட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளன.

Also Read: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்: ஆச்சரியப்படுத்தும் விலை, மைலேஜ் – முழு விவரம்!

காபுல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை அஷ்ரப் கானி ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்திருக்கிறது. அவரும் அவருடைய பாதுகாப்பு ஆலோசரும் தஜிகிஸ்தான் சென்றுள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். முன்னதாக அதிகார பரிமாற்றம் சண்டையின்றி அமைதியான முறையில் நடைபெறும் என அரசுத் தரப்பு செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

தலிபான்


அடுத்த ஆப்கன் அதிபர் யார்?

தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வந்ததை அடுத்து இடைக்கால அதிபாராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. ஜலாலி காபுலில் பிறந்தவர் என்றாலும் 1987 வரை அமெரிக்க குடிமகனாக இருந்தவர். இவர் அமெரிக்காவின் மேரிலேண்டில் வசித்து வருகிறார்.

Also Read: பெற்றோர்களே உஷார்: கொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இப்படி ஒரு ஆபத்தா?

ஆப்கானிஸ்தான் கொள்ளையடிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், குழப்பத்தை போக்கும் வகையில் தலிபான்கள் சிலர் காவல் அவுட்போஸ்ட்களில் அமர்த்தப்படுவர் என தலிபான் செய்தித்தொடர்பாளர் ஸபிஹுல்லா தெரிவித்துள்ளார்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனிடையே 126 பேருடன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு டெல்லி வந்தடைந்தது. இதில் வந்த ஆப்கன் பெண் ஒருவர் “ஆப்கானிஸ்தானை உலக நாடுகளை கைவிட்டதை என்னால் நம்பமுடியவில்லை. எங்கள் நண்பர்கள் கொல்லப்படுவார்கள். தலிபான்கள் எங்களை கொன்றுவிடுவார்கள். எங்கள் பெண்களுக்கு இனி உரிமைகள் என்று எதுவும் இருக்காது.” என கண்ணீர் மல்க பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: