முகப்பு /செய்தி /உலகம் / உலகின் பல்வேறு சாம்ராஜ்யங்களாலும் சாய்க்க முடியாத ஆப்கானிஸ்தான்

உலகின் பல்வேறு சாம்ராஜ்யங்களாலும் சாய்க்க முடியாத ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

உலகிற்கே நாட்டாமை போல் நடக்கும் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்து தலைகுனிந்து வெளியேறியிருக்கிறது. வல்லரசான அமெரிக்காவுக்கு மட்டுமல்ல பல்வேறு சாம்ராஜ்யங்களாலும் சாய்க்க முடியாத நாடாக ஆப்கானிஸ்தான் திகழ்ந்து வருகிறது.

  • Last Updated :

ஆப்கானிஸ்தான், சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு நீளும் இந்து குஷ் மலைத் தொடர்களாலும், குளிர் மிகுந்த வறண்ட பாலைவனங்களாலும் சூழப்பட்ட கரடு முரடான தேசம். நிலப்பகுதியைப் போலவே முரட்டுத்தனமாக போராடக் கூடிய மக்களைக் கொண்ட ஆப்கானிஸ்தானை எந்த பேரரசும் வெகு காலம் ஆண்டதில்லை.

கலத் எனப்படும் கோட்டை போன்ற அரணைக் கொண்ட கிராமங்கள், மலைகளுக்குள் பல கிலோ மீட்டர் தூரம் நீளக்கூடிய குகைகள் என ஆப்கானிஸ்தானின் நிலவமைப்பு எதிரிகளை திணறடிக்கக்கூடியது. பாபர் போன்ற சில அரசர்கள் உள்ளூர் தலைவர்களுக்கு அதிக அதிகாரம் தந்தோ, பணம் பொருள் தந்தோ சிலகாலம் கட்டுக்குள் வைத்திருந்தாலும் எவரது முழு கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வெகுகாலம் இருந்ததேயில்லை.

அதுவும் தற்போதைய ஆப்கானிஸ்தான் 18-வது நூற்றாண்டில் இருந்து வல்லரசு நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. உலகையே ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவை ரஷ்ய படையெடுப்பில் இருந்து காப்பதற்காக ஆப்கானிஸ்தானை தங்களுடன் இணைத்துக் கொள்ள துடித்தனர். ஆனால் மூன்று போர்களை முமுமூச்சுடன் நிகழ்த்தியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் அங்கு நிரந்தரமாக கொடி நாட்டமுடியவில்லை.

Also Read : ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்! - பயணிகள் கதி என்னவானது?

இதுபோல் 1979ல் ஆப்கானிஸ்தானில் நுழைந்து காபூலைக் கைப்பற்றியது அன்றைய சோவியத் ரஷ்யா. ஆனால் கரடு முரடான உட்பகுதிகளுக்கு போனபோது அமெரிக்காவையே அச்சுறுத்திய சோவியத் படைகளை முஜாகிதின் போராளிகள் போட்டுப் பார்த்தனர். 1O ஆண்டு காலம் போடாத திட்டமெல்லாம் போட்டு போரிட்டு 15 ஆயிரம் வீரர்களை பலி தந்து போதுமடா சாமி என ஆப்கானில் இருந்து நடையைக்கட்டியது ரஷ்யா.

பின்னர் 2001-ல் இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பிறகு வீறு கொண்டு 2001-ல் ஆவேசமாக ஆப்கான் வந்திறங்கின ஆனானப்பட்ட அமெரிக்கப் படைகள். சதாம் உசைனின் ஈராக் படையையெல்லாம் தரைமட்டமாக்கிய அமெரிக்க விமானங்கள், ஆப்கன் மலைகளுக்குப் பின்னிருந்து குகைகளுக்குள் இருந்தும் தாக்கும் தாலிபான்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறின, 20 ஆண்டு போருக்குப் பின் ஒப்பந்தம் என்ற பெயரில் சமாதானக் கொடியைக் காட்டி தற்போது வெளியேறியுள்ளது அமெரிக்கா.

Also Read : ஆப்கான் பரிதாபம்:  விமான டயரில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் பலி- வெளியாகும் பயங்கர வீடியோக்கள்

இப்படியாக உலகையே அச்சுறுத்திய மங்கோலியப் படைகள் தொடங்கி, பிரிட்டிஷ் பேரரசின் ராணுவம், உலகின் பெரும் வல்லரசாக திகழ்ந்த சோவியத் யூனியன் படைகள் மற்றும் உலகின் சூப்பர் பவர் அமெரிக்கா என பல சாம்ராஜ்யங்களின் ஆதிக்க மனோபாவத்துக்கு சமாதி கட்டிய நாடாக சாம்ராஜ்யங்களின் சமாதியாக ஆப்கானிஸ்தான் திகழ்ந்து வருகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Afghanistan