ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் சிறப்பு விமானம் மூலம் காபூலில் உள்ளவர்களை மீட்டு வருகின்றன. காபூல் விமான நிலையத்துக்கு வெளியில் உள்ள பகுதிகள் முழுவதும் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளதால், விமான நிலையங்களுக்குள் பொதுமக்கள் நுழையாதபடி தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் தெரிவித்தார். இதேபோன்ற தகவலை பிரிட்டனும் வெளியிட்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தால் தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து அதிகரித்து வருவதால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமானப் போக்குவரத்து கூடிய விரைவில் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியிருந்தார். இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து பேரோன் ஹோட்டல் அருகிலும் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 13 கொல்லப்பட்டுள்ளனர் என்று தொடக்க நிலையில் அடையாளம் காணப்பட்டது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 150 பேர் குண்டு வெடிப்பால் காயமடைந்துள்ளனர். அதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அமெரிக்க ராணுவத்துக்கான மொழிபெயர்பாளர்கள், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்றுபவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அமெரிக்கா ராணுவத்தினர் குறைந்தது 13 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Bomb blast, News On Instagram, Taliban