ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் மிக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்கு காபூல் பிராந்தியத்தில் நேற்று மாலை தொழுகை சமயத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில், மசூதியின் மூத்த இமாம் அமீர் முகமது காபூலி உள்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து ஆம்புலன்ஸை வரவழைத்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆம்புலன்ஸ் மூலம் அருகே உள்ள காபூல் எமர்ஜென்சி மருத்துவமனைக்கு 27 பேர் கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பின் தீவிரம் சக்திவாய்ந்தது என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தாலிபான் அரசு புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த குண்டுவெடிப்பு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றி சரியாக ஓராண்டு நிறைவாகியுள்ளது. தாலிபான் ஆட்சியில் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை அச்சுறுத்தலில் உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கூறிவரும் நிலையில், அந்நாட்டில் தாலிபான் அரசுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. ஐஎஸ் அமைப்புக்கு எதிராக தீவிரமான கருத்துக்களை கூறிவந்த தாலிபான் மூத்த மதத் தலைவர் ரஹிமுல்லா ஹக்கானி ஐஎஸ் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதையும் படிங்க: ஒரு லட்சத்துக்கும் மேல் தினசரி கொரோனா பாதிப்பு.. புதிய அலை பீதியில் தென்கொரியா மக்கள்!
அந்நாட்டில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி பெறுவதற்கு ஆதரவாக ரஹிமுல்லா ஹக்கானி தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். இவரின் நிலைப்பாட்டிற்கு எதிராக அங்குள்ள மத அடிப்படைவாத அமைப்புகள் ஏற்கனவே இரு முறை கொலை முயற்சி செய்த நிலையில், கடந்த வாரம் தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Bomb blast, Taliban