காபூலில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தாலிபான்கள் - 17 பேர் பலி: 41 பேர் காயம்

தாலிபான்கள்

காபூலில் துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் காயமடைந்துள்ளனர்.

  • Share this:
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதால் மக்களும், முந்தைய ஆட்சியாளர்களும் ஆடிப்போயிருக்கின்றனர். அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களையெல்லாம் வைத்திருந்த ஆப்கன் படைகளே பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டன. தாலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து 33 மாகாணங்களும் எதிர்ப்பே இல்லாமல் மண்டியிட்டன. ஆனால் ஆப்கனில் எஞ்சியுள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் தாலிபான்களுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

முடிந்தால் வந்துப்பார் ஒரு கை பார்ப்போம் என சவால்விட்டுள்ளனர் தீரத்துக்கு பெயர்பெற்ற பஞ்ச்ஷிர் போராளிகள். ஆனானப்பட்ட சோவியத் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் போரிட்டபோது கூட பஞ்ச்ஷிர் மட்டும்தான் அடிபணியவில்லை. பாரசீக மொழியில் பஞ்ச்ஷிர் என்றால் ஐந்து சிங்கங்கள் எனப் பொருள். பெயருக்கேற்பவே ஆக்கிரமிப்புக்கு அடிபணியாத சிங்கமாக பஞ்ச்ஷிர் விளங்கி வருகிறது.

ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றிய தாலிபான்கள், தற்போது பஞ்ச்ஷிர் பகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான சண்டைகள் நடைபெற்றுவருகிறது. கடந்த சில தினங்களாக இருதரப்பிலும் நடைபெறும் சண்டையில் சுமார் 300 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், பஷ்ஞ்ஷிர் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதாக நேற்று இரவு தகவல்கள் வந்தன. அதனையடுத்து, அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் காபூலிலிருந்த தாலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். காபூலின் பல பகுதிகளிலும் இதுபோல துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது
Published by:Karthick S
First published: