ஆப்கனில் இந்தியா கட்டிக் கொடுத்த ₹2000 கோடி மதிப்பிலான சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் முயற்சி

salma dam

ஜூலை 12 மற்றும் ஜூலை 30 ஆகிய தினங்களில் ஏற்கனவே சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • Share this:
ஆப்கானிஸ்தானில் இந்திய அரசால் இரு நாட்டு நட்பு  அடிப்படையில் கட்டித்தரப்பட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சல்மா அணையை தகர்க்க தலிபான் அமைப்பினர் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் 3வது முறையாக தலிபான்களின் தாக்குதலை ஆப்கன் ராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்குமான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வந்தாலும், அமெரிக்கப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு சண்டை மேலும் தீவிரமாகியிருக்கும் நிலையில் ஆப்கன் அரசுப் படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

salma dam


கடந்த சில நாட்களுக்கு முன்னர் காந்தகார் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதலை தலிபான்கள் நடத்தியதில் விமான சேவை முற்றிலும் தடைபட்டது.

தலிபான்களின் அடுத்த இலக்காக சல்மா அணை இருப்பதாக சொல்லப்படுகிறது. நல்லெண்ண அடிப்படையில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆப்கானிஸ்தானுக்காக, இந்தியா கட்டித்தந்த அணை இது. ஹீரத் மாகாணத்தில் ஹரி ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த அணையை 2016ம் ஆண்டு பிரதமர் மோடியும், ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியும் இணைந்து திறந்து வைத்தனர்.

salma dam


கடந்த சில தினங்களாகவே சல்மா அணையை தகர்க்க தலிபான்கள் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே இரண்டு முறை தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அந்த தாக்குதல்களை அரசுப் படைகள் முறியடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

Also Read:  Umlingla Pass | விமானம் பறக்கும் உயரத்தில் பாதியளவு உயரம் கொண்ட சாலை.. இந்தியாவின் புதிய சாதனை!

இந்நிலையில் சல்மா அணை மீது 3வது முறையாக தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆப்கன் ராணுவ செய்தித்தொடர்பாளரான ஃபவாத் அமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சல்மா அணை மீதான தலிபான் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் மீது அரசுப் படையினர் பதில் தாக்குதல் தொடுத்ததில் தலிபான்கள் தாக்கப்பட்டு அங்கிருந்து தப்பியோடினர்” இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். கூடுதல் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஜூலை 12 மற்றும் ஜூலை 30 ஆகிய தினங்களில் ஏற்கனவே சல்மா அணை மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். முதல் முறையாக நடந்த தாக்குதலில் தலிபான்கள் வீசிய ஏவுகணைகள் அணைக்கு அருகே விழுந்தது ஆனால் அணைக்கு அதிர்ஷ்டவசமாக சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சல்மா அணைக்கு தலிபான்களால் பாதிப்பு ஏற்பட்டால் ஹீரட் மாகாணத்தில் உள்ள 8 மாவட்ட மக்களின் விவசாய தண்ணீர் தேவையும், மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: