வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பேராசிரியர்கள், ஆப்கானிஸ்தான் நலன் கருதி நாடு திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தலிபான் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானிஸ்தானை விட்டு விலகிச் சென்ற நிலையில் இந்த சம்பவம் ஏற்பட்டது.
இதையும் படிங்க - எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான பனிபாறை இந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் மறைவதற்கு வாய்ப்பு!
கொடூர தண்டனைகள், குற்றங்களுக்கு பெயர் போன தலிபான்கள் தற்போது தூதரக ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது முன்பு இருந்த உள்நாட்டு எதிர்ப்புகள் குறையத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், ஆப்கன் அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
அனைத்து இன மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் பொதுவான நாடாக உள்ளது. ஆப்கனின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் பொறுப்பு. நாட்டில் வளம் இல்லாத காரணத்தால் கல்வியில் பின் தங்கியுள்ளோம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அனைத்து பேராசிரியர்களும் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாட்டின் கல்வி வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் உள்ளிட்டவற்றின் மீது அக்கறை கொண்டு பேராசிரியர்கள் ஆப்கன் திரும்ப வேண்டும். அவர்களின் தியாகத்தால் ஆப்கானிஸ்தான் முன்னேறும்.
இதையும் படிங்க - ''உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்'' - அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
இவ்வாறு நாடு திரும்பும் பேராசிரியர்களுக்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கனை சேர்ந்த அகதிகள் 14 லட்சம்பேர் பாகிஸ்தானிலும், 8 லட்சம் பேர் ஈரானிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பின்னர், ஒரு மாதம் கழித்து இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டது. இந்த தற்காலிக அரசு இன்னமும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Taliban