ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள சுமார் 5,000 தாலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது என ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் 18 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கும், தாலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது.
இதன்மூலம், சண்டை முடிவுக்கு வந்துள்ளது. 14 மாதங்களில் அமெரிக்க படையினர் நாடு திரும்ப உள்ள நிலையில், தனது தேர்தல் வாக்குறுதி நிறைவேறியுள்ளதாக அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, ஆப்கன் வளர்ச்சிக்கும், அந்நாட்டில் வசிக்கும் அனைத்து பிரிவினரின் நலன்களை பாதுகாப்பதற்கும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள சுமார் 5,000 தாலிபான் கைதிகளை விடுவிக்க முடியாது என ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.