ஹோம் /நியூஸ் /உலகம் /

காபுலில் இந்தியர் துப்பாக்கி முனையில் கடத்தல் என தகவல்!

காபுலில் இந்தியர் துப்பாக்கி முனையில் கடத்தல் என தகவல்!

Afghan origin indian national abducted in Kabul at gunpoint .

Afghan origin indian national abducted in Kabul at gunpoint .

கடத்தப்பட்ட பன்சிரி லாலின் குடும்பத்தினர் டெல்லி அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடத்தப்பட்டவரின் குடும்பத்தினர் டெல்லியில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு சூழல் நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது. பெண்கள், முன்னாள் அரசுத்துறை ஊழியர்கள், ராணுவத்தினர், ஆப்கன் அல்லாதவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஆப்கானில் வசித்து வரும் இந்திய பூர்வீகம் கொண்ட இந்து ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

காபுலின் 11வது போலீஸ் மாவட்டத்தில் மருந்து கடை நடத்தி வந்தவர் பன்சிரி லால் அரெண்டே, இவருக்கு வயது 50.. இவர் ஒரு ஆப்கன் வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர் ஆவார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் நேற்றிரவு 8 மணியளவில் தனது கடையில் இருந்துள்ளார். அப்போது தனது கடை ஊழியர்களுடன் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த சிலர் பன்சிரி லால் மற்றும் அவரின் கடை ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

Also Read: இனி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கேட்டால் திரையில் எழுத்துக்கள் தோன்றும் – செம்ம அப்டேட்!

கடத்தப்பட்ட பன்சிரி லாலின் குடும்பத்தினர் டெல்லி அருகேயுள்ள பரீதாபாத் பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் பன்சிரி லால் கடத்தப்பட்டது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பன்சிரி லால் கடத்தப்பட்ட நிலையில் அவருடைய கடை ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும், அவர்களை ஈவு இரக்கமின்றி கடத்தல்காரர்கள் அடித்து தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

Also Read:  மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஸ்டண்ட்.. சிக்கலில் யூடியூபர்கள்

இதனிடையே இந்தியர் கடத்தப்பட்டது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியர் கடத்தபட்டது குறித்து ஆப்கனில் உள்ள சீக்கிய இந்து அமைப்பினர் தெரிவித்ததாக இந்திய உலக போரம் அமைப்பின் தலைவர் புனீத் சிங் சந்தோக் இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் கூறியிருப்பதுடன், உடனடியாக தில் தலையிட்டு கடத்தப்பட்ட இந்தியரை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban