ஹோம் /நியூஸ் /உலகம் /

காற்றில் கரைந்த கால்பந்து வீரரின் கனவு - தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க எண்ணி விமானத்தில் இருந்து விழுந்து பலி

காற்றில் கரைந்த கால்பந்து வீரரின் கனவு - தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க எண்ணி விமானத்தில் இருந்து விழுந்து பலி

அன்சாரி

அன்சாரி

காபூல் விமான நிலையத்தில் குவிந்திருந்த மக்கள் அனைவருமே அன்சாரியை போலத்தான் ஆப்கானைவிட்டு வெளியேற காத்திருந்தவர்கள்தான்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்செல்ல நினைத்து விமானத்தின் சக்கரங்களில் பயணித்த போது ஆகாயத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த மூன்று பேரில் ஒருவர் அந்நாட்டு கால்பந்து அணியை சேர்ந்த வீரர் என்பது தெரியவந்துள்ளது.

  ஷகி அன்வாரி (Zaki Anwari) கால்பந்து விளையாட்டில் பல்வேறு கனவுகளுடன் இருந்த 19 வயதான இளம் ஆப்கான் கால்பந்து வீரர். அந்நாட்டு ஜூனியர் அணியில் விளையாடி வந்துள்ளார் ஷகி அன்வாரி எதிர்காலத்தில் ஆப்கானின் ஸ்டார் ப்ளேயராக வரக்கூடிய அனைத்து திறமைகளுடன் இருந்த வீரர். தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதும் அன்வாரி கலக்கம் அடைந்தார். 19 வயதான அன்வாரி தாலிபான்களின் ஆட்சிக்குறித்து கேள்விப்பட்டிருந்தார்.

  Also Read:  விமான நிலையத்தை உடைத்துக் கொண்டு உள்ளே ஓடும் பொதுமக்கள்.. உண்மை என்ன?

  தாலிபான்களின் ஆட்சியில் மீண்டும் 20 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல அன்வாரிக்கு விருப்பமில்லை. இதற்காக அன்வாரி செய்யத் துணிந்தது நமக்கு முட்டாள் தனமாக தெரிந்தாலும் அந்த இளங்கன்றுக்கு அதைவிட்டால் வேறு வழி கிடையாது. தங்களுக்கு இதுவரை அரணாக இருந்த அமெரிக்க ராணுவம் பின்வாங்கியதால் இனி தங்களை தாலிபான்களிடம் இருந்து யாரும் காப்பாற்ற போவதில்லை என உணர்ந்தே அந்த முடிவுக்கு வந்துள்ளார்.

  காபூலில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட தயாரான விமானத்தில் ஏறுவது என முடிவு செய்தார். காபூல் விமான நிலையத்தில் குவிந்திருந்த மக்கள் அனைவருமே அன்சாரியை போலத்தான் இந்த தேசத்தை விட்டு வெளியேற காத்திருந்தவர்கள் தான். கால்பந்து வீரர் என்பதால் அன்சாரிக்கு சிவப்பு கம்பளம் எல்லாம் விரிக்கப்படவில்லை. ரன்வேயில் ஓடும் விமானத்தை அவனுக்கு துரத்திப்பிடிக்க எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது என தெரியவில்லை. அன்சாரிக்கு மட்டுமல்ல அந்த விமானநிலையத்தில் காத்திருந்த அனைவருக்கும் அந்த முரட்டு தைரியம் எங்கிருந்து வந்தது. பேருந்தில் ஏறுவது போல் விமானத்தின் சக்கரங்களுக்கு இடையே ஏறியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அமெரிக்காவுக்கு சென்றால் தன்னுடைய வாழ்க்கை மாறிவிடும் என நினைத்த அன்சாரிக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை. விமானத்தில் இருந்து தவறிவிழுந்த அன்சாரி பரிதாபமாக உயிரிழந்தார். விமானத்தில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தது அன்சாரிதான் என்றும் அவரது உடல்பாகங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விளையாட்டு ஆணையம் உறுதிசெய்துள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Accident, Afghanistan, America, Death, Football, Sports Player, Taliban