ஆப்கானிஸ்தானில் மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கிய சிறுமிகள்!

மாதிரிப் படம்

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரத் நகரில் சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நீண்ட அங்கியும் ஹிஜாப்பும் அணிந்து அவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர். 

 • Share this:
  ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினர், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாகவும் முன்புபோல் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என கூறியிருந்தனர். இதேபோல், புதிய அரசில் பெண்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தாலிபான்களின் கடந்த ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர் போன்றோர் கடும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே, மீண்டும் அத்தகைய இருண்ட காலத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் கவலை தெரிவித்து வீடுகளிலேயே அடைந்துள்ளனர். பெண்கள் மீண்டும் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது போன்றவற்றுக்கு வாய்ப்பு இருக்காது என்றும் கருத்து நிலவுகிறது.

  இந்நிலையில், மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேரத் நகரில் சிறுமிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். நீண்ட அங்கியும் ஹிஜாப்பும் அணிந்து அவர்கள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.  இது தொடர்பாக ஏ.எஃப்.ப். ஊடகத்திடம் கூறிய மாணவி ரூக்யா, மற்ற நாடுகளை போல் தங்கள் நாடும் வளர்ச்சியடைய வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

  இதையும் படிங்க:  அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை கைப்பற்றிய தாலிபான்கள்: அச்சத்தில் ஆப்கான் வீரர்கள்!


  அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபான்களிடம் 20 வருடத்துக்கு முன்பு இருந்ததற்கும் தற்போதுக்கும் தாலிபான்கள் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு கொள்கை, நம்பிக்கை ஆகியற்றில் எந்த மாற்றமும் இல்லை. அதேவேளையில், அனுபவம், முதிர்ச்சி மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றில் நிச்சயமாக நிறைய மாற்றங்கள் உள்ளது என்று பதில் அளித்திருந்தனர்.

  மேலும் படிங்க:அரசாங்கத்தில் சேருங்கள்: பெண்களுக்கு தாலிபான்கள் அழைப்பு!


  பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் என பலரும் நினைத்திருந்த நிலையில், அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளது தாலிபான்களிடையே ஏற்பட்ட மாற்றமாக பார்க்கப்படுகிறது.
  Published by:Murugesh M
  First published: