மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஆப்கான் குழந்தை - இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் கொண்டாடும் நெட்டிசன்கள்

ஆப்கான் சிறுமி

ஆப்கானில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் சென்ற ஒரு குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  ஆப்கானில் இருந்து விமானம் மூலம் பெல்ஜியத்தில் தரையிறங்கிய  மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தாலிபான்களுக்கு அஞ்சி அந்நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாடுகளில் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர்.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காபூல் விமானநிலையம் தொடர்பாக வெளியான வீடியோக்கள் அதிர்ச்சி ரகங்களாக இருந்தது.  விமான நிலையத்தில் விலைவாசிகள் விண்ணை எட்டுகின்றனர். ஏதோ நம்பிக்கையில் பசியோடும் பட்டினியோடும் அங்கு பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர்.  ஆப்கானில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் சென்ற ஒரு குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பெல்ஜியம் மிலிட்டரி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஆப்கான் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் நடந்து செல்கின்றனர். தாய், தந்தை,சகோதரி ஆகியோர் முன்னால் நடந்து செல்ல சிறுமி ஒருவர் அவர்களின் பின்னால் உற்சாகமாக துள்ளிக்குதித்து ஓடும் புகைப்படம் தான் இப்போது நெட்டிசன்களால் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. ராய்ட்டர் செய்தி நிறுவனத்தை சேர்ந்த புகைப்படக்காரர் இந்தக் காட்சியை படம்பிடித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தப்புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்நாடு முன்னாள் பிரதமர், “அகதிகளை பாதுகாக்கும் போது இதுதான் நடக்கும். அந்தச் சிறுமியை பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.  இணயத்தில் இந்த போட்டோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம் எனக் கூறி நெட்டிசன்கள் அந்த புகைப்படக்காரருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: