தாலிபான்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் கட்டளையிட்டது - அம்பலப்படுத்திய ஆப்கன் துணை அதிபர்!

amrullah saleh

நாம் இப்போது பஞ்ஷிர் செல்கிறோம், வழியில் தாலிபான்கள் குறுக்கிட்டு அவர்களிடம் வீழும் நிலை ஏற்பட்டால், என் நெற்றியில் இரு முறை சுட்டுவிட வேண்டும், குரான் மீது ஆணையிட்டு உறுதி கூற வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

  • Share this:
தாலிபான்களிடம் சிக்கிவிடும் நிலை ஏற்பட்டால் என் நெத்தியில் இரண்டு முறை சுடுமாறு எனது மெய்க்காப்பாளருக்கு உத்தரவிட்டேன் என்று முன்னாள் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சலே கூறியுள்ளார். மேலும் காபுல் வீழ்ந்த அன்று, அங்கிருந்து பஞ்ஷிர் பள்ளத்தாக்குக்கு எவ்வாறு தப்பித்தோம் என்பது குறித்தும் பாகிஸ்தானின் துரோகம் குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் வீழ்ந்துவிடாத ஒரே மாகாணமாக விளங்கும், பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தஞ்சமடைந்துள்ள ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, டெய்லி மெயில் பத்ரிக்கைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

ஆப்கனின் வீழ்ச்சி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மட்டும் அவமானம் கிடையாது, ஒட்டுமொத்த மேற்கத்திய நாட்டினருக்கும் ஏற்பட்ட அவமானம். ஏனெனில், தாலிபான்களின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் பின்புலமாக இருந்தது. தாலிபான்கள் காபுலை நெருங்கிய நாட்களில், ஒவ்வொரு மணி நேரமும் பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து தாலிபான்களுக்கு கட்டளைகள் பறந்தது. இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது அனைவரும் அறிந்ததே. அல்கொய்தாவினர் இன்று காபுல் தெருக்களில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இது உங்கள் அரசியல்வாதிகளுக்கும் தெரியும் என அவர் இங்கிலாந்தின் டெய்லி மெயில் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள எழுத்துப்பூர்வ கடித பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read: தாலிபானுக்குள் ஸ்லீப்பர் செல்.. பாகிஸ்தானின் நரித்தந்திரம் – பக்கா பிளானுடன் காபுல் பறந்த ஐஎஸ்ஐ தலைவர்!

அவர் கூறியிருப்பதாவது, “காபுல் வீழ்ந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று காலை 9 மணிக்கு தாலிபான்கள் காபுலை சுற்றிவளைத்த தகவல் எனக்கு சொல்லப்பட்டது. உயர் அதிகாரிகள், அமைச்ச்ர்கள், அதிபர் என எல்லோரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. காபுல் காவல் ஆணையரை தொடர்பு கொண்ட போது ஒரு மணி நேரம் மட்டுமே எங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என சொன்னார், ஆனால் உண்மையில் ஆப்கன் படையைச் சேர்ந்த யாரையுமே வீதியில் பார்க்க முடியவில்லை.

Also Read: 600 தாலிபான்களை ஒரே நாளில் போட்டுத்தள்ளிய பஞ்ஷிர் போராளிகள்; 1000 பேர் சிறைபிடிப்பு!

பின்னர் அகமது மசூதை தொடர்பு கொண்டு பஞ்ஷிர் செல்வது குறித்து திட்டமிட்டேன். வீட்டில் இருந்த எனது மனைவி, பெண் பிள்ளைகளின் புகைப்படங்களை அழித்து விட்டு அங்கிருந்த எனது மெய்ப்பாதுகாவலரான ரஹீமிடம் பேசினேன். நாம் இப்போது பஞ்ஷிர் செல்கிறோம், வழியில் தாலிபான்கள் குறுக்கிட்டு அவர்களிடம் வீழும் நிலை ஏற்பட்டால், என் நெற்றியில் இரு முறை சுட்டுவிட வேண்டும், குரான் மீது ஆணையிட்டு உறுதி கூற வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அங்கிருந்து நாங்கள் கடினமான பயணத்தை மேற்கொண்டோம், வழியில் தாலிபான்களுடன் சண்டையிட்டவாறு சென்றோம். அந்தப் பயணம் சாதாரணமானது கிடையாது என அம்ருல்லா சலே தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: