Home /News /international /

புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகரைக் கொன்ற ஆப்கான் தாலிபான்கள்

புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகரைக் கொன்ற ஆப்கான் தாலிபான்கள்

நாட்டுப்புற பாடகர் பவாத் அந்த்ரபி.

நாட்டுப்புற பாடகர் பவாத் அந்த்ரபி.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகே வன்முறை தலைவிரித்தாடுகிறது, இந்நிலையில் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகே வன்முறை தலைவிரித்தாடுகிறது, இந்நிலையில் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

    அந்தராபி பள்ளத்தாக்கைச் சேர்ந்த பக்லான் மாகாணத்தின் பிரபல நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபி.

    இவரது வீட்டுக்குள் புகுந்த தாலிபான்கள் இவரை வீட்டிலிருந்து வெளியே இழுத்து வீசினர். பிறகு அவரைத் தலையில் சுட்டு ஈவு இரக்கமின்றி கொலை செய்தனர். ஃபவாத் கொலைக்கான காரணம் தெரியவில்லை.

    Also Read: இந்தியாவும் பாகிஸ்தானும் எங்களைப் பயன்படுத்த நினைத்தால்- தாலிபான் தலைவர் ஸ்டானிக்சாய் பிரத்யேக பேட்டி

    ஆனால் உள்ளூர் தலிபான்கள் கவுன்சில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். கிஷ்னபாத் என்ற கிராமத்தில் இந்த கொடூர கொலை அரங்கேறியது.

    1996-2001-ல் தாலிபான்கள் போட்ட கெடுப்பிடி சட்டங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது, அதன்படி பொதுவெளியில் யாரும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதோ பாடுவதோ கூடாது.

    மலைசார்ந்த இயற்கைச் சூழலில் அந்தராபி ஃபவாத் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. காபூலிலிருந்து 250 கிமீ தூரத்தில் இவரது கிராமம் உள்ளது.

    இஸ்லாமியப் பாடல்களை பொதுவெளியில் பாடலாம், ஆனால் பொதுவெளியில் மெல்லிசைப் பாடல்களைப் பாடுதல் கூடாது என்பது தாலிபான்களின் இஸ்லாமியச் சட்டம்.

    இந்நிலையில் பரிதாபமாக இந்த புகழ்பெற்ற பாடகரை தாலிபான்கள் சுட்டுக் கொலை செய்தது அங்கு கடும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Afghanistan, Taliban

    அடுத்த செய்தி