தாலிபான்களிடம் இருந்து தப்புவதற்காக முதியவர்களை மணக்க கட்டாயப்படுத்தப்படும் சிறுமிகள்!

மாதிரிப் படம் (courtesy: reuters)

ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணங்கள் இயல்பானது என்றாலும், அமெரிக்காவில் இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.

 • Share this:
  12, 13 வயது  மனைவிகளுடன் 60 வயதையொத்த ஆப்கான் முதியவர்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. தாலிபான்களிடம் தப்புவதற்காக முதியவர்களை மணக்க சிறுமிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்குள் வந்துள்ளதால் அந்நாட்டில் இருந்து பலரும் அகதிகளாக வெளியேறத் தொடங்கினர். தற்போது விமான சேவையில் தடை ஏற்பட்டுள்ளதால், சாலை வழியாக பலரும் வெளியேற தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள முகாம்களுக்கு மனைவி என்ற பெயரில் முதியவர்களுடன் 12, 13 வயது சிறுமிகள் அழைத்து வரப்படுவது அதிகரித்துள்ளதை அமெரிக்க அதிகாரிகள் கவனித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் குழந்தைத் திருமணங்கள் இயல்பானது என்றாலும், அமெரிக்காவில் இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.

  இதையும் படிங்க: மீண்டும் விமான சேவை: ஆப்கானிஸ்தானில் இருந்து 200 பேர் வெளியேறினர்!


  ஆப்கானிஸ்தானில் இருந்து தப்புவதற்காக முதியவர்களால் தாங்கள் வன்புணர்வு செய்யப்படுவதாக கட்டாயப்படுத்தி திருமணம் செய்யப்படுவதாகவும் சிறுமிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக 1,24,000  பேரை மீட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தானியர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: