Home /News /international /

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் - யார் இந்த முல்லா அப்துல் கனி பராதர்?

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள் - யார் இந்த முல்லா அப்துல் கனி பராதர்?

முல்லா அப்துல் கனி பராதர்

முல்லா அப்துல் கனி பராதர்

எந்த வித எதிர்ப்புமின்றி ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் தாலிபான்கள்.  ஆனால் இவர்களின் கறாரான மதரீதியான ஆட்சி ஒரு நாட்டை ஆள்வதற்குத் தேவையான கொடுக்கல் வாங்கல் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  எந்த வித எதிர்ப்புமின்றி ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் தாலிபான்கள்.  ஆனால் இவர்களின் கறாரான மதரீதியான ஆட்சி ஒரு நாட்டை ஆள்வதற்குத் தேவையான கொடுக்கல் வாங்கல் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

  பெண் சுதந்திரமா? இஸ்லாமிய சட்டங்களுக்குள் என்ன அனுமதிக்கப்படுமோ அதுதான் என்கின்றனர், கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம் ஆகிய தாராளவாதங்கள் புழங்க வேண்டிய இடங்களிலும் இவர்கள்து மத அடிப்படைவாதம் தலைத்தூக்கினால் மற்ற நாடுகளுடனான உறவுகள், உள்நாட்டில் மக்கள் ஆதரவை எப்படி பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மக்களை சதாசர்வ காலமும் துப்பாக்கியின் கீழ், துப்பாக்கி முனையில் வைத்திருக்க முடியாது, அப்படி வைக்க முயற்சி செய்த அமைப்புகள் உலகில் அழிந்து போன வரலாறுகளைத்தான் நாம்பார்த்திருக்கிறோம்.

  மிரட்டும் தாலிபான்கள்


  இந்நிலையில் தாலிபான்களின் ஆட்சியாளர்கள் யார் என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவளிப்பதில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் முன்னிலை வகிக்கின்றனர்.

  புதிய தலைமையாக முல்லா அப்துல் கனி பராதர்:
  அமெரிக்காவுடன் 10 ஆண்டுகளாக காபூலிலும், தோஹாவிலும் தாலிபான்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அரசியல் பிரிவில் நம்பர் 2 ஆன முல்லா அப்துல் கனி பராதர்  புதிய ஆட்சியின் தலைமைப் பீடத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
  இவர்தான்  இந்த வாரத்தில் ஆப்கானைப் பிடித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் முதல் முதலாக பேசினார்.

  தாலிபான்களின் பெருந்தலைவர்களாகக் கருதப்படும் அமிர் உல் மொமினீன், மால்வி ஹைபத்துல்லா அக்குன்ஜாதா ஆகியோர் நேரடியாக அரசில் பங்கேற்க மாட்டார்கள். தோகாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போது ஈரான் போன்று ஒரு சுப்ரீம் லீடர் ஒருவர் நியமிக்கப்படுவார், அப்படி இருந்தால் அந்தப் பதவிக்கு மால்வி ஹைபத்துல்லா அக்குன்ஜதா நியமிக்கப்படுவார்.

  பெண்கள் பற்றிய கேள்விக்கு சிரிக்கும் தாலிபான்கள்.


  முல்லா  அப்துல் கனி பராதர்  என்பவர் பொபல்ஜாய் பஷ்தூன் இனக்குழுவைச் சேர்ந்தவர். தாலிபானின் இணை நிறுவனரும் இவரே. முல்லா முகமது உமருடன் இவர் சேர்ந்துதான் தாலிபான் அமைப்பு தொடங்கப்பட்டது. பராதர் என்றால் சகோதரன் என்று பொருள். இந்தப் பெயரை அவருக்குச் சூட்டியவர் அமீர். 2010-ல் ஐ.எஸ்.ஐ. இவரைக் கைது செய்து வைத்தது. அப்போதைய அதிபர் கர்சாய் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவானவர்.
  பராதர் 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.

  2018-ல் தாலிபான்களுடன் பேச்சு வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு மேற்கொள்ளத் தொடங்கிய போது முல்லா அப்துல் கனி பராதர் விடுவிக்கப்பட்டார். 9 உறுப்பினர் கொண்ட தாலிபான் குழுவுக்கு இவர்தான் தலைமை. இந்தப் பேச்சு வார்த்தையின் போதுதான் அமெரிக்கப் படைகளை ஆப்கானிலிருந்து வாபஸ் பெற ஒப்புக் கொள்ளப் பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது அல் கொய்தா, ஐஎஸ்,  பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று தாலிபான்கள் உறுதி அளித்தனர்.

  இப்போது பராதருக்கும் பாகிஸ்தானுக்குமான உறவு எப்படி என்பது புரியவில்லை. ஆனால் இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, ராணுவம் ஆகியவற்றின் தலையீடு இருந்தாலும் சுயசிந்தனையுடன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  முல்லா முகமது யாகூப்:

  முல்லா முகமது யாகூப், 31, இவர் முல்லா உமரின் மகன் ஆவார். தாலிபான்களின் ராணுவப் பிரிவின் தலைவர் ஆவார். இவர் புதிய ஆட்சியில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறது. இவர் இப்போது தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடலாம். இவர் பாகிஸ்தானுக்கு நெருக்கமானவர்.

  Talibans


  ஆட்சிப்பீடத்தில் அடிபடும் இன்னொரு பெயர் முல்லா கைருல்லா கைர்குவா மற்றும் முல்லா முகமது ஃபசல். இவர்களுக்கு வயது 54,  அமெரிக்கப் படையினர் தாலிபான்களை வெளியேற்றிய பிறகு குவந்தநாமோ பே சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். இவர்கள் பிறகு மே, 2014-ல் தான் விடுவிக்கப்பட்டனர். இவர்களை அமெரிக்கா சும்மா விடுவிக்கவில்லை, ஹக்கானி நெட்வொர்க் அமெரிக்க ராணுவ வீரர் பொவே பெர்க்தலை பிடித்து வைத்து மிரட்டியதையடுத்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

  தலைமறைவாக உள்ள சிராஜுதின் ஹக்கானி புதிய தாலிபான்கள் ஆட்சியில் இடம்பெற விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் முடிவுகளை எடுப்பதில் இவர் பங்கு அதிகமிருக்கும். இவர் ஐநா தீர்மானம் 1272-ன் படி பயங்கரவாதி என்று நிர்ணயிக்கப்பட்டவர். இவரது தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை வைத்தது.

  ஹக்கானி நேட்வொர்க் தாலிபான்களுடன் ஒருங்கிணைந்தவர்கள்தான் ஆனாலும் வேறுபட்ட நடவடிக்கைகள், அமைப்பு உறுப்புகள் கொண்டவர்கள். இவர்களுக்கு அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.

  இவர்களோடு ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், இவர் தோகாவில் தாலிபான்கள் அலுவலகத்தை நடத்தியவர். மற்றொருவர் ஜபியுல்லா முஜாகிர் ஆகியோரும் முக்கியமானவர்கள். மேலும் ஹக்கானி சகோதரர் அனாஸ் என்பவரும் போட்டியில் உள்ளார்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Afghanistan, Taliban

  அடுத்த செய்தி