• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • விமான நிலையம் வந்தால் அடி உதை- தாலிபான்கள் கடும் எச்சரிக்கை

விமான நிலையம் வந்தால் அடி உதை- தாலிபான்கள் கடும் எச்சரிக்கை

ஆப்கான் நிலவரம்.

ஆப்கான் நிலவரம்.

ஆப்கனை விட்டுச் செல்லும் மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை நாட்டை விட்டுச் செல்லவேண்டாம் எனக் கேட்கக் கோரி முஸ்லிம் மதகுரு, இமாம்களிடம் தலிபான்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆப்கனை விட்டுச் செல்லும் மக்களுக்கு அறிவுறுத்தி அவர்களை நாட்டை விட்டுச் செல்லவேண்டாம் எனக் கேட்கக் கோரி முஸ்லிம் மதகுரு, இமாம்களிடம் தலிபான்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தலிபான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் அடக்குமுறையிலும், அட்டூழியங்களிலும் ஈடுபடலாம் என்பதால் மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் நாட்டை விட்டுச் செல்லும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா சார்பில் ஆப்கனைச் சேர்ந்த 7 ஆயிரம் பேரை அந்நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.

    இந்தச் சூழலில் காபூல் விமான நிலையத்துக்கு உரிய ஆவணங்களுடன் வேறு நாட்டுக்குப் பயணிக்க வரும் மக்களையும் தலிபான்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். அவ்வாறு சண்டையிடும், வாக்குவாதம் செய்யும் மக்களை ஏ.கே.47 துப்பாக்கியால் தாக்குகின்றனர்.

    ரேடியா நியூஸிலாந்துக்கு ஆப்கனைச் சேர்ந்தவர் அளித்த பேட்டியில், “உரிய ஆவணங்கள், விசாவுடன் வேறு நாட்டுக்குச் செல்வதற்கு காபூல் விமான நிலையம் வந்தாலும் தலிபான்கள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு வரும் மக்களை ஏ.கே.47 துப்பாக்கிகள் மூலம் தாக்குகிறார்கள். வானத்தை நோக்கி சுட்டு மக்களை அச்சுறுத்தி, தாக்கி அனுப்புகிறார்கள்.

    ஒவ்வொருவரும் அந்நாட்டை விட்டு வெளியேறவே விரும்புகிறோம். ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாளை விட மோசமாகிக் கொண்டே வருகிறது. எங்களைப் பாதுகாக்கிறோம். ஆனால், குடும்பத்தாரைப் பாதுகாக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

    தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை கைப்பற்றியதால் பெண்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெண் கல்வி மறுக்கப்படும் , கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணை இல்லாமல் பெண்கள் பொது இடத்துக்கு வர தடைவிதிக்கப்படும். மீறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகள் கட்டுக்குள் வைத்திருந்த இந்த 20 ஆண்டுகளில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசுப்பணிகள், அரசியலில் பெண்களின் பங்களிப்பு இருந்தது. மீண்டும் 20 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல ஆப்கான மக்கள் விரும்பவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    என்னதான் பெண்களுக்கு உரிமை கொடுப்போம் என்று தாலிபான்கள் கூறினாலும் அவர்களது பழைய வரலாறு அவர்கள் வாக்குறுதி மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: