ஆப்கான் பரிதாபம்: டயரில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் பலி- வெளியாகும் பயங்கர வீடியோக்கள்
ஆப்கான் பரிதாபம்: டயரில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் பலி- வெளியாகும் பயங்கர வீடியோக்கள்
படம்: சமூக ஊடகங்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தில் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து குடிசைப்பகுதியில் விழுந்து பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தில் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து குடிசைப்பகுதியில் விழுந்து பலியாகினர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை தலிபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் சில விமானங்கள் அங்கிருந்து இயக்கப்படுவதால் அதில் ஏறி ஆப்கானிலிருந்து தப்பினால் போதும் என்று மக்கள் முண்டியடிக்கின்றனர்.
Three Kabul residents who were trying to leave the country by hiding next to the tire or wing of an American plane, fell on the rooftop of local people. They lost their lives due to the terrible conditions in Kabul. pic.twitter.com/Cj7xXE4vbx
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவம் விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது அமர்ந்திருப்பதுமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தஞ்சம் கேட்டு ஆப்கன் மக்கள் பலர் விமானத்தை சுற்றி ஓடிவருவதாகவும், மறுபுறம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதை கொண்டாடும் விதமாக தலீபான் ஆதரவாளர்கள் அதை சுற்றி கோஷமிட்டு கொண்டாடுவதாகவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் அங்கிருந்து தப்பிச் செல்ல ஆயிரக்கணக்கானோர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அஸ்வாகா செய்தி நிறுவமன் வெளியிட்டுள்ள செய்தியில், “3 வாலிபர்கள் விமானத்தின் டயரைப் பிடித்து தொங்கிய படி பயணம் செய்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். ஆனால் வீட்டின் மேல் 3 பேரும் விழுந்தனர், பயங்கர சப்தம் கேட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
விமானநிலையத்தில் 5 பேர் பலியாகினர். இவர்கள் கூட்ட நெரிசலில் பலியானார்களா அல்லது துப்பாக்கிச் சூட்டில் பலியானார்களா என்பது தெரியவில்லை.
விமான இறக்கைகளிலும் டயர்களிலும் தொங்கிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.