அனைத்து வங்கிகளிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயம் தங்கள் சேமிப்புகள் அவர்கள் கைக்குச் சென்று விடும் ஒருபோதும் நமக்கு திரும்ப வராது என்பதில் ஆப்கான் மக்கள் திட்டவட்டமாக இருக்கின்றனர். வறுமையின் பிடியில் உள்ளது ஆப்கான், அரசு கஜானா காலி.
ஆப்கான் பொருளாதாரமே ரொக்கத்தில் நடப்பதுதான், மொத்தம் 10-15% மக்களுக்குத்தான் வங்கிக் கணக்கே உள்ளன. முந்தைய ஆப்கான் அரசின் சொத்துக்கள் வெளிநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்தன. இப்போது தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் அவர்கள் கையில் பணம் சிக்கக் கூடாது என்று வாசல் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கான் பண மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளாவ உயர்ந்துள்ளது.
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆப்கானுக்கு உதவி புரிவது இனி கடினமே. ஏறக்குறைய உதவி கிடைக்காது என்றே கூறலாம். ஆப்கான் மத்திய வங்கியின் கவர்னர் அஜ்மல் அகமதியும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
அமெரிக்க பெடரல் ரிசர்வில் உள்ள 7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்க இருப்பை எடுக்க முடியாமல் அமெரிக்கா தடை செய்துள்ளது, அதே போல் உலக வங்கியும் தாங்கள் ஒதுக்கிய 460 மில்லியன் டாலர்கள் தொகையையும் பிடித்து வைத்துள்ளது.
Also Read: இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம்: அவசரநிலை பிரகடனம்- அன்னியச் செலாவணி நெருக்கடி உச்சம்
பலரும் வங்கி வாசலில் காத்திருந்து வெறுங்கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்திகள் கூறுகின்றன. தினக்கூலி செய்தாவது அன்றாட உணவுப்பிரச்னையை தீர்க்கலாம் என்றால் வர்த்தகம் போன்றவை சுத்தமாக நிறுத்தப்பட்டு விட்டன. வங்கிகளில் காத்திருந்து பணத்தை எடுக்க முடியாததால் மக்கள் ஆத்திரத்தில் வன்முறைகளில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது.
வருமானத்துக்கு வழியின்றி வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தின் எதிர்காலமும் தெரியாமல் ஆப்கான் மக்கள் பெரிய வாழ்வாதார நெருக்கடியையும் பீதியையும் சந்தித்து வருகின்றனர்.
உலக நாடுகளின் நம்பிக்கையை தாலிபான்கள் பெற்றால்தான் அவர்களால் ஆப்கானிஸ்தானை நிதி நெருக்கடி இல்லாமல் நடத்த முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் ஆப்கான் மக்கள் அன்றாட வாழ்வாதார நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். ஆப்கான் வங்கிகள் வீழ்ந்து விட்டன. மனிதார்த்த பேரழிவை ஆப்கான் சந்திப்பதாக ஐநா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.