ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆப்கானிஸ்தானின் உயர் தலைவராக நியமிக்கப்பட்ட ஹிபத்துல்லா அகுந்த்சாதா - யார் அவர்?

ஆப்கானிஸ்தானின் உயர் தலைவராக நியமிக்கப்பட்ட ஹிபத்துல்லா அகுந்த்சாதா - யார் அவர்?

ஹிபத்துல்லா அகுந்த்சதா

ஹிபத்துல்லா அகுந்த்சதா

ஆப்கானிஸ்தானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உயர் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்சாதா செயல்படுவார் என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ள நிலையில், புதிய அரசு அமைக்கும் பணியில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பிரதமர் மற்றும் அதிபருக்கும் மேலாக சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர் செயல்படுவார். இந்தப் பதவியில் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதா-வை நியமிக்க தாலிபான்கள் முடிவுசெய்துள்ளனர்.

  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள, quetta நகரில் 1961-ம் ஆண்டில் பிறந்தவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு 1980களில் குடும்பத்துடன் குடியேறினார் ஹிபத்துல்லா.

  பழமைவாத முஜாஹிதின் அமைப்பின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவராவார். இஸ்லாமிய மத வழிபாட்டு அறிஞர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வந்த ஹிபத்துல்லா, 1980-களில் ரஷ்ய படைகளை எதிர்த்தார். தாலிபான் அமைப்பில் 1994-ல் இணைந்தார்.

  1996-ல் தாலிபான்கள் ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக திகழ்ந்த முல்லா ஓமரின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக திகழ்ந்தவர் ஹிபத்துல்லா, காந்தஹாரில் ராணுவ நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் செயல்பட்டார்.

  2016-ம் ஆண்டில் தாலிபான்களின் தலைவராகவும் ஹிபத்துல்லா அகுந்த்சாதா திகழ்ந்துள்ளார். தாலிபான்களுக்குள் பிரச்னை வரும்போதெல்லாம் fatwa எனப்படும் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்குவதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார்.

  பொதுவெளியில் இதுவரை பெரிய அளவில் முகத்தை கூட காட்டாத ஹிபத்துல்லாவின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ளது. தற்போது இவர் தங்கியிருக்கும் இடமும் மர்மமாகவே உள்ளது.

  தற்போதுள்ள அதிபர் பதவியை கலைத்துவிட்டு, புதிதாக பிரதமர் பதவியை மட்டும் அறிமுகம் செய்ய தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் புதிய அரசு அமைக்கப்பட உள்ள நிலையில், 60 வயதான ஹிபத்துல்லாவுக்கு அந்நாட்டின் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏற்கனவே மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் மற்றும் காவல் துறை தலைவர்களை தாலிபான்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, Taliban