• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • அமைச்சர்களை குறிவைத்து ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு விபத்து

அமைச்சர்களை குறிவைத்து ஏடன் விமான நிலையத்தில் வெடிகுண்டு விபத்து

இந்த வெடிகுண்டு தாக்குதலின் காரணம் குறித்து இன்னும் தெளிவாகவில்லை.

 • Share this:
  சவுதி அரேபியாவிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசாங்க, அமைச்சரவை உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானத்தின் மீது, ஏமன் நாட்டின் ஏடன் நகர விமான நிலைய முனையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் பலியான நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

  இதனைத் தொடர்ந்து, பிரதமர் மெய்ன் அப்துல்மாலிக் சயீத் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் பாதிப்பில்லாமல் தப்பித்து அதிபர் மாளிகைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. ஹுத்தி கிளர்ச்சியாளர்களின் "கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலின்" விளைவாக இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக, தகவல் துறை அமைச்சர் மோமர் அல் எர்யானி கூறியிருக்கிறார்.

  அதிபர் அப்த்ரபு மன்சூர் ஹாடிக்கும் பிரிவினைவாத தெற்கு இடைக்கால கவுன்சிலுக்கும் (எஸ்.டி.சி) விசுவாசமுள்ள சக்திகளுக்கு இடையிலான கடுமையான பிளவுகளை ஆற்றுப்படுத்தும் முயற்சியாக சயீத்தின் புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. சவுதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி ஹுத்திகளை தோற்கடிப்பதற்கும் அதிபர் ஹாடியின் ஆட்சியை மீட்டெடுப்பதற்கும் ஒரு ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, ​​2015-ல் தீவிரமடைந்த மோதலால் ஏமன் பேரழிவை சந்தித்தது.  இந்த சண்டையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. உலகின் மிக மோசமான மனிதாபிமான பேரழிவை தூண்டிய அச்சம்பவம் காரணமாக, மில்லியன் கணக்கானோர் பஞ்சத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அங்கு காணப்படும் கோவிட்-19 தொற்று அந்த நாட்டின் நிலையை மேலும் மோசமாக்கி வருகிறது.

  இதற்கிடையே இந்த வெடிகுண்டு தாக்குதலின் காரணம் குறித்து இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் மூன்று மோட்டார் குண்டுகள் முனையத்தில் வீசப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், அங்குள்ள பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது.

  சவுதி தொலைக்காட்சியான அல்-ஹதத் ஒளிபரப்பிய காணொளியில், ஒரு ஏவுகணை போன்ற பொருள், கூட்டம் இருந்த பகுதியை நோக்கி வந்ததை பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஏடனில் நடத்தப்பட்ட ராணுவ அணிவகுப்பு மீது ஹுத்திக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டனர். அதைப் போல தற்போதைய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: