ஹோம் /நியூஸ் /உலகம் /

பிரியங்கா சோப்ரா அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்திப்பு - பெண்கள் உரிமையைப் பற்றிக் கலந்துரையாடல்!

பிரியங்கா சோப்ரா அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சந்திப்பு - பெண்கள் உரிமையைப் பற்றிக் கலந்துரையாடல்!

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ்வுடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துரையாடியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaUnited states of AmericaUnited states of AmericaUnited states of America

அமெரிக்காவில் நடந்த ஜனநாயக தேசியக் குழுவின் மகளிர் தலைமை மன்ற மாநாட்டில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ்வுடன் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி- யில் நேற்று நடைபெற்ற ஜனநாயக தேசியக் குழுவின் மகளிர் தலைமை மன்ற மாநாட்டில் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார். அதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்துகொண்டுள்ளார். அங்குத் துணை அதிபர் கமலா ஹாரிஸ்வுடன் பிரியங்கா சோப்ரா பெண்களின் ஓட்டுரிமை பற்றிப் பேசிய நிகழ்வைப் பற்றி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் நான் இங்கு ஓட்டுப் போடவில்லை ஆனால் என்னுடைய கணவர் போடுகிறார் மற்றும் என்னுடைய மகள் ஒரு நாள் போடுவாள் என்று தொடங்கி பெண்கள் உரிமையைப் பற்றிப் பேசியுள்ளார். பெண்களின் சக்திகளை முதலில் உலகம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. ஆனால் தற்போது பெண்கள் ஒன்றாய் இணைந்து தவரைச் சென்றதைத் திருத்தும் இடத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Also Read : காந்தி சிலையில் அழுக்கு.. கைக்குட்டையால் சுத்தம் செய்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி - வீடியோ

தொடர்ந்து, பல சுயநலமற்ற பெண்களின் தியாகத்தின் விளைவு தான் பெண்களின் முன்னேற்றத்திற்குக் காரணம் என்று அவர்களுக்கு நன்றி சொல்லிக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

மேலும் அதிபர் கமலா ஹாரிஸ்வுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடியது மரியாதைக்குரியதாக அமைந்தது என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பை ஏற்படுத்திக்கொடுத்த மகளிர் தலைமை மன்றத்தையும், மன்றத்தில் செயலாளர் ஹிலாரி கிளிண்டனக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kamala Harris, Priyanka Chopra