கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய நேரப்படி அதிகாலை 3.45-க்கு ஒன்டாரியோ தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய மாணவர்கள் வேனில் சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹர்ப்ரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.
விபத்து குறித்து ஒன்டாரியோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், 'உயிரிழந்த இந்திய மாணவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்' என்று உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க - உக்ரைன் ராணுவத்தில் இணைந்த உலகின் நம்பர் ஒன் துப்பாக்கி சுடும் வீரர்...
கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா தனது ட்விட்டர் பதிவில், 'இந்திய மாணவர்கள் 5 பேர் டொரான்டோஅருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது துயரத்தை அளிக்கிறது. காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்த தரப்படும்' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க - சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
விபத்தின்போது படுகாயம் அடைந்த இந்திய மாணவர்கள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கனடாவின் கிரேட்டர் டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Canada