முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா பரிசோதனை.. சில நிமிடங்களில் ரிசல்ட் - அபுதாபியில் அறிமுகம்

அபுதாபி

யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் முதலில் இந்த கருவியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

  • Share this:
    கோவிட்- 19 கண்டறியும் ஃபேஷியல் ஸ்கேனருக்கு அபுதாபி அரசு அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கொரோனா மூன்றாவது அலை பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா பரிசோதனையை எளிமையாக்கும் விதமாக அபுதாபியில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபுதாபியை சேர்ந்த இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் தான் இந்த ஃபேஷியல் ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது. அபுதாபி அரசு இதனை பயன்பாட்டுக்கு கொண்டுள்ளது. அங்குள்ள ஷாப்பிங் மால்களில் இந்த கருவி நேற்று முதல் பயன்பாட்டுக்கு உள்ளது. மால்களுக்கு வரும் மக்கள் இந்த கருவியின் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

    Also Read: அவமானப்பட்ட ஊரில் போலீஸ் அதிகாரியாக வந்திறங்கிய பெண் - கேரளா ஆனி சிவாவின் வெற்றி கதை

    யாஸ் தீவு மற்றும் முசாபா பகுதிகளில் முதலில் இந்த கருவியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அங்கு சுமார் 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 90சதவீதம் தொற்றுடையவர்களிடம் இருந்து மிகத்துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஸ்கேனர் எப்படி செயல்படும்

    ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்கேனரை பயன்படுத்தலாம். அந்த இ.டி.இ உருவாக்கியுள்ள அப்ளிக்கேஷன் மொபைலில் இருக்க வேண்டும். இந்த ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் மூலம் செயல்படுகிறது. நமது உடலில் வைரசின் புரத பொருளான ஆர்.என்.ஏ. இருப்பது தெரிந்தால் மின்காந்த அலையின் வீச்சில் மாற்றம் ஏற்படும். ஒரு கருவியின் உதவியுடன் இந்த அப்ளிகேஷன் செயல்படுகிறது. சோதனை செய்யும் இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் அந்த ரீடர் பொருத்தப்படுகிறது.

     



    ஸ்மார்ட்போனில் உள்ள அப்ளிக்கேஷனை கொண்டு ஒருவரை ஸ்கேன் செய்யலாம். சில வினாடிகளில் முகத்தை ஸ்கேன் செய்துவிடும். ஸ்கேன் செய்யும் நபரிடம் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு மெசேஜ் வந்துவிடும். இதன்மூலம் ஒரு சில நிமிடங்களில் கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
    கொரோனா தொற்று இல்லை என்றால் பச்சை நிறத்தில் ஒளிரும். தொற்று இருந்தால் சிவப்பு நிறத்தில் ஒளிரும். சிவப்பு நிறம் காட்டிய நபர்கள் 24 மணி நேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: