ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை... அதிரடியாக 200 பேர் கைது..!

அரசியல், கல்வி, கட்டமைப்பு என அனைத்திலும் சீனா ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை... அதிரடியாக 200 பேர் கைது..!
ஹாங்காங் போராட்டம்(கோப்புப்படம் - Reuters)
  • News18
  • Last Updated: November 3, 2019, 8:51 PM IST
  • Share this:
ஹாங்காங் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சாலை மறியல், பொதுச் சொத்துகளைச் சேதமடையச் செய்தல் ஆகிய குற்றத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங் நாட்டின் தலைமைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக இப்போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மக்கள் ஆயுதங்கள் ஏந்து போராடக் களத்தில் இறங்கியதால் போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை களைத்து வருகின்றனர். கூடுதலாக ஒரே நேரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சீனாவுக்கு எதிரான போராட்டம் என்பதை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஹாங்காங் தலைமையும் சீனாவுக்குத் துணை நிற்பதால் நிலைமை பதற்றமடைந்துள்ளது. ஆனால், அரசியல், கல்வி, கட்டமைப்பு என அனைத்திலும் சீனா ஹாங்காங் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

மேலும் பார்க்க: மிகவும் மோசமான உடல்நிலையில் நவாஸ் ஷெரிஃப்..!

அல் பாக்தாதி கொலையா, தற்கொலயா?
First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்