பாகிஸ்தான் போர் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவச் சிலை! இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சியா?

அவர் காபி குடித்த மக்கும்(MUG) வைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் அரசியல் விமர்சகர் அன்வர் லோதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் போர் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவச் சிலை! இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சியா?
அபிநந்தன் வர்த்தமான்
  • News18
  • Last Updated: November 10, 2019, 5:28 PM IST
  • Share this:
பாகிஸ்தான் போர் அருங்காட்சியகத்தில் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப் படை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் நாட்டுக்குள் புகுந்து தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை இந்திய வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தது. அந்த விமானங்களை விரட்டிச் சென்றபோது, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் விமானப்படையில் சிக்கினார்.

பின்னர், அவரை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. அவர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அவருக்கு காபி வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு குறித்த வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது. இந்தநிலையில், பாகிஸ்தானின் போர் அருங்காட்சியில் அபிநந்தன் வர்த்தமானின் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் காபி குடித்த மக்கும்(MUG) வைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் அரசியல் விமர்சகர் அன்வர் லோதி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் இத்தகையச் செயலைச் செய்துள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Also see:

 
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்