ஹோம் /நியூஸ் /உலகம் /

வேலைவேண்டி கேக்கில் ரெஸ்யூம்.. தரமான சம்பவத்தைச் செய்த அமெரிக்க வேலையில்லா பட்டதாரி

வேலைவேண்டி கேக்கில் ரெஸ்யூம்.. தரமான சம்பவத்தைச் செய்த அமெரிக்க வேலையில்லா பட்டதாரி

பெண் அனுப்பிய கேக் ரெஸ்யூ புகைப்படம்

பெண் அனுப்பிய கேக் ரெஸ்யூ புகைப்படம்

அமெரிக்க வேலையில்லா பட்டதாரி பெண் ஒருவர் வேலை வேண்டி நிறுவனத்திற்கு கேக்கில் சுயவிவர குறிப்பு படிவத்தை அச்சிட்டு அனுப்பி வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaAmericaAmerica

  அமெரிக்காவில்  எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்க பெண் ஒருவர் நூதன முறையில்  பெரிய கேக்கில் அவரது ரெஸ்யூமை பிரிண்ட் செய்து அனுப்பியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  அமெரிக்காவில் வட கரோலினா பகுதியில் வசிக்கும் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் என்ற பெண் ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் மற்ற நபர்களை விடத் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்று நூதனமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நைக் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திற்கு ரெஸ்யூம் அச்சிடப்பட்ட கேக்கை அனுப்பியுள்ளார்.

  முக்கிய காலணி நிறுவனமான நைக் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சி வினோதமாக இருப்பினும் அது ஒரு நல்ல முயற்சி என்று இணையத்தில் பல பேரின் மனதை வென்று வைரலாக வருகிறது.

  நைக் நிறுவனத்தில் அவர் எதிர்பார்த்த வேலையில் தற்போது காலி இடம் இல்லாத நிலையில் அவரின் தோழி கொடுத்த ஐடியாவை வைத்துப் பல நாட்கள் இதற்காக யோசனை செய்து இறுதியில் களத்தில் இறங்கியுள்ளார்.

  Also Read : முன்னணி நிறுவன சிஇஓ-க்களை பின்னுக்குத் தள்ளிய டிக்-டாக் பிரபலம் ! ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

  ஓரிகானில் பீவர்டன் பகுதியில் உள்ள நைக் நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திற்கு அந்த ரெஸ்யூம் அச்சிடப்பட்ட கேக்கை ஒரு வழியாகத் தைரியத்தைக் கொண்டுவந்து நிறுவனத்தில் விழா கொண்டாடும் நாளாகப் பார்த்து அனுப்பி வைத்துள்ளார். மேலும் அந்த சிறப்பான சம்பவத்தை இணைய தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

  நெடிசன்கள் அதனைப் பார்த்து வியந்ததுடன் தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.  இந்த முயற்சிக்குப் பாராட்டுகள் ஒரு பக்கமும் இருப்பினும் வெறுப்புகளும் கிடைத்துள்ளது. மேலும் சிலர் அந்த கேக் எந்த வகையை (Flavour) சேர்ந்தது என்பதில் தான் ஆர்வமாக இருக்கின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Job, Job search, Trending