ஹோம் /நியூஸ் /உலகம் /

மெதுவாக நடந்து வந்து குழந்தையை தண்டவாளத்தில் தள்ளிய பெண்.. பதறிப்போன பயணிகள்!

மெதுவாக நடந்து வந்து குழந்தையை தண்டவாளத்தில் தள்ளிய பெண்.. பதறிப்போன பயணிகள்!

ரயில் பாதையில் குழந்தையை தள்ளிவிடும் பெண்

ரயில் பாதையில் குழந்தையை தள்ளிவிடும் பெண்

அமெரிக்காவில் ரயில் பாதையில் 3 வயது குழந்தையை பெண் ஒருவர் தள்ளி விடும் பதைபதைக்கும் வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiaamericaamerica

அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள மல்டிநோமா என்ற நகர்ப்புற ரயில் நிலையம் ஒன்றில் பயணிகள் ரயில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு 3 வயதுள்ள பெண் குழந்தை ஒன்றும் ரயில் ஏறுவதற்காக தனது தாயுடன் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென அந்த குழந்தையை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டுள்ளார். தண்டவாளத்தில் விழுந்த குழந்தைக்கு தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆண் ஒருவர் தண்டவாளத்தில் குதித்தது குழந்தையை காப்பாற்றியுள்ளார். குழந்தையை தள்ளிவிட்ட பெண் எதுவுமே நடக்காதது போல் சென்று அங்குள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவி்ல் பதிவாகியிருந்தது. சம்பவம் குறித்த காவல்துறையின் உடனடியாக விரைந்து சென்று அந்தப் பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் பிரயானா லேஸ் என்பது தெரியவந்தது.

குழந்தையை தள்ளி விட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், ரயில் நடைமேடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். அதோடு காவல்துறையினர் இந்த பதைபதைக்கும் வீடியோ காட்சியை இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்.

எதற்காக 3 வயது பெண் குழந்தையை அந்தப் பெண் ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டார் என்பது குறித்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள். மேலும், இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட பெண்ணை பிணையில் வெளிவராத அளவிற்கு கடுமையாக தண்டிக்குமாறு நீதித்துறையிடம் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

First published:

Tags: America, Crime News