• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சாவின் விளிம்பில்.. கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த மூதாட்டி.. திரைப்படங்களை மிஞ்சும் கிளைமாக்ஸ்

சாவின் விளிம்பில்.. கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த மூதாட்டி.. திரைப்படங்களை மிஞ்சும் கிளைமாக்ஸ்

Life Support

Life Support

குடும்பத்தினர் வென்ட்டிலேஷன் சப்போர்டை நிறுத்தி விட முடிவு செய்தனர்

  • Share this:
சீரியல்களில் திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளை பல முறை பார்த்திருப்போம். ‘எங்களால் முடிந்ததை செய்து விட்டோம். இனி எல்லாம் கடவுளின் கையில்’ என்று மருத்துவர்கள் தங்களால் முடிந்ததை செய்ததாக கூறி செல்வதும், நோயாளிகள் படுக்கையிலேயே நினைவுகள் இன்றி அல்லது கோமாவில் நீண்ட காலம் இருப்பதும், சட்டென்று ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத போது நினைவு திரும்புவதும் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். அதே போல உண்மையாகவே ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

திரைப்படங்களில் மருத்துவர்கள் கூறுவது போல, ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கில்’ என்ற சம்பவம் நடந்துள்ளது. செயற்கை சுவாசம் ஆதரவோடு, கோமாவில் இருந்த முதிய பெண்மணி மீண்டு வந்துள்ளார்.

பெட்டினா லெர்மன் என்ற 69 வயதான பெண்மணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசம் உதவியோடு கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். ஒரு மாதத்திற்கு மேலாகியும், இவரால் வெண்டிலேஷன் சப்போர்ட் இல்லாமல் சுவாசிக்க முடியவில்லை. அது மட்டுமின்றி, இவர் நினைவுகள் தவறி கோமாவில் இருந்துள்ளார்.

போர்ட்லாண்டில் உள்ள மைன் மெடிக்கல் சென்ட்டரில் இந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பெண்மணியின் சிகிச்சைக்காக இவரது குடும்பத்தார் NGO மூலம் நிதி திரட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read:   முன்னாள் துணை மேயரின் மருமகள் குழந்தை கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளி

தொடர்ந்து வெண்டிலேட்டர் சுவாச உதவியோடு, சிகிச்சை அளித்து வந்த நிலையிலும், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று இவரின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

லெர்மனின் வயது மற்றும் தொடர்ந்து கோமாவில் இருப்பதும், இவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்தது. எனவே, இவரது குடும்பத்தார் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து, சிகிச்சை எதுவும் இனி பலனளிக்குமா என்று தெரியவில்லை என்பதை அறிந்த பின்னே, முதியவரின் செயற்கை சுவாச ஆதரவை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தனர்.

Also read:   பால் ஐஸ்கிரீமில் குண்டு: வெடித்து சிதறி சிறுவன் காயம் - கேரளாவில் பரபரப்பு

அதன் படி, அக்டோபர் 29 அன்று குடும்பத்தினர் இவருக்கு வென்ட்டிலேஷன் சப்போர்ட் நிறுத்தி விட முடிவு செய்தனர். ஆனால், ஒரு அற்புதம் நிகழ்வது போல, இவர்கள் என்று வென்ட்டிலேஷன் சப்போர்ட்டை நிறுத்தலாம் என்று முடிவு செய்த சில மணி நேரங்களில் இவருக்கு நினைவு திரும்பி, கோமாவில் இருந்து மீண்டுள்ளார்.

பெட்டினாவின் மகன் ஆண்ட்ரூ லெர்மன், ‘அம்மா இனி கண்விழிக்க மாட்டார், என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்’ என்று கூறினார். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது, வயது, நீரிழிவு நோய் பாதிப்பு ஆகிய காரணங்களால், மற்றும் செயற்கை சுவாசம் தேவைப்படும் அளவுக்கு தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்ததால், குணப்படுத்த முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரின் லைஃப் சப்போர்டை எடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், உடனே மருத்துவமனைக்கு வருமாறு, ஆண்ட்ரூவுக்கு ஒரு அழைப்பு வந்தது.

பதட்டமாக என்னவென்று விசாரித்த போது, இவரின் அம்மா கண்விழித்து விட்டதாகத் தெரிவித்தனர். அதிர்ச்சியில் ஃபோனை தவற விட்டதாக தெரிவித்த ஆண்ட்ரூ, உடனே மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். கோமாவில் இருந்து மீண்டாலும், இன்னும் முழுமையாக குணமாகவில்லை, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: