குளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவை திடீரென கருப்பாக மாறிய விசித்திரம்

குளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவை திடீரென கருப்பாக மாறிய விசித்திரம்

Swan

இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளை அன்னப்பறவை ஒன்று திடீரென கருப்பு நிறத்தில் மாறிய ஒரு விசித்திரமான சம்பவம் மக்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. ஏதோ ஒரு அறியப்படாத பொருள் அந்த குளத்தில் கொட்டப்பட்ட பின்னர் வெள்ளை அன்னப்பறவை கருப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது.

  • Share this:
இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வெள்ளை அன்னப்பறவை ஒன்று திடீரென கருப்பு நிறத்தில் மாறிய ஒரு விசித்திரமான சம்பவம் மக்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. ஏதோ ஒரு அறியப்படாத பொருள் அந்த குளத்தில் கொட்டப்பட்ட பின்னர் வெள்ளை அன்னப்பறவை கருப்பு நிறமாக மாறியதாக கூறப்படுகிறது. அது பிரிண்டருக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை டோனராக இருக்கலாம் என்று ஆர்எஸ்பிசிஏ காவல்துறை சந்தேகிக்கிறது. சமீபத்தில் வெஸ்ட்பரியில் உள்ள கருப்பு மூலக்கூறு கலந்திருந்த குளத்திலிருந்து இந்த அன்னப்பறவை  மீட்கப்பட்டது. இது ஆர்எஸ்பிசிஏ வெஸ்ட் ஹட்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் இந்த உயிரினத்தைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.

மீட்கப்பட்ட இந்த அன்னப்பறவை, வேண்டுமென்றே தாக்கப்பட்டதா என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறவை தற்போது ஆர்எஸ்பிசிஏ அலுவலகத்தில் கவனமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து BBCயிடம் தெரிவித்த ஆர்எஸ்பிசிஏ இன்ஸ்பெக்டர் ஸ்டெப் டேலி,  ‘அன்னப்பறவை முற்றிலும் கருப்பாக மாறியிருந்ததை கண்டு நாங்கள் திகிலடைந்தோம்" என்று கூறியுள்ளார். பறவை கருப்பாக மாறியதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் குழப்பமடைந்துள்ளனர்

கடந்த சனிக்கிழமையன்று இந்த பறவை மீட்கப்படுவதற்கு முன்னர், மானே வே பகுதிக்கு அருகில் இருந்த குளம் ஒன்றிலிருந்து வெளியே வர இந்த அன்னப்பறவை தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் டேலி மேலும் கூறியதாவது, "அன்னப்பறவையின் நிலை பார்ப்பதற்கு மிகவும் மோசமானதாக இருக்கிறது. முதலில் அதன் மீது எண்ணெய் போன்ற ஏதோ ஒரு பொருள் இருந்ததாக நாங்கள் நினைத்தோம். ஆனால் அந்த பொருள் ஃபோட்டோகாபியர் மை டோனரைப் போலவே அதிக துகள் கொண்டதாக உள்ளது

மேலும், துகள் காரணமாக கருப்பு நிறத்தில் மாறிய அன்னப்பறவையை சுத்தப்படுத்த ஒவ்வொரு முறையும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நேரத்தை செலவிட்டதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அன்னப்பறவையின் கருப்பு நிறம் மறையவில்லை. மேலும், கருப்பு நிறம் போவதற்காகவே ஒரு பிரத்யேக திரவத்தை பயன்படுத்தி தொண்டு நிறுவன ஊழியர்கள் அதனை சுத்தப்படுத்தி வருகின்றனர். அன்னப்பறவையை பலமுறை தூய்மைப்படுத்தியும் அதன் மேல் உள்ள கருப்பு நிறம் மறையவில்லை என்பது தான் வேதனை அளிக்கக்கூடிய  ஒரு விஷயம். மேலும், அந்த டோனர் போன்ற கருப்பு துகள் கொட்டப்பட்ட குளத்தில் இதுபோன்று வேறு ஏதேனும் ஒரு அன்னப்பறவையை கண்டால் தகவல் அளிக்கும்படி அப்பகுதி மக்களிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: