ஹோம் /நியூஸ் /உலகம் /

கோடிகளில் ஒன்று - ரகசிய கேமராவில் சிக்கிய வெள்ளை நிற கரடி!

கோடிகளில் ஒன்று - ரகசிய கேமராவில் சிக்கிய வெள்ளை நிற கரடி!

வெள்ளை நிற கரடி

வெள்ளை நிற கரடி

White Bear : மிகவும் அறிய வகை இனமான வெள்ளை நிற கரடி கண்காணிப்பு கேமராவில் தென்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaUnited states of AmericaUnited states of America

அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் வித்தியாசமான வெள்ளை நிறத்தில் கரடி ஒன்று கண்காணிப்பு கேமராவில் சிக்கியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்முடைய காலத்திலே கூட நிறைய உயிரினங்கள் புதிதாகத் தோன்றியுள்ளன அல்லது அவற்றை உலகம் கண்டறிந்துள்ளது. அதேபோல, நம்முடைய காலத்திற்குப் பிறகும் புதிய உயிரினங்கள் தோன்றலாம் அல்லது தற்போதுள்ள உயிரினங்கள் மறையலாம். இந்த பரிணாம மாற்றத்தில் மனிதர்களும் விதிவிலக்கு அல்ல.

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அறிந்திராத புதிய உயிரினம் குறித்த தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் பட்டியலில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருப்பது தான் வெள்ளை நிற கரடி. இந்த கரடி முக அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை ஒட்டி அமைந்துள்ள மேற்கு மேல் தீபகற்ப பகுதியை ஒட்டி அமைந்துள்ள தி கிரேட் லேக் என்ற ஏரி மற்றும் வனம் சார்ந்த பகுதியில் இந்தக் கரடி தென்பட்டுள்ளது. இப்பகுதியில் மிக அதிக எண்ணிக்கையிலான கரடிகள் வசித்து வருகின்றன. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் இந்தக் கரடியின் உருவம் பதிவாகியுள்ளது.

அதே சமயம், கரடியின் உடலில் இருப்பது வெள்ளை நிற ரோமம்தானா என்பதை அமெரிக்காவின் இயற்கை வளங்கள் துறை அதிகாரிகள் இதுவரையிலும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இதுபோன்ற மாற்று நிறத்துடன் கரடிகள் தென்படுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்று அங்குள்ள வன உயிரின நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு கூட, விவிட் கலர், சாக்கலேட் கலர் போன்ற நிறங்களில் ரோமம் கொண்ட கரடிகள் இப்பகுதியில் தென்பட்டுள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Also Read : ஐந்து ஆண்டுகள் முன்பு தொலைந்த மூக்கில் அணிந்திருந்த வளையம் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி!

ஏலக்காய் நிற கரடியும் கூட ஆய்வின்போது தென்பட்டுள்ளது என்றும், ஆனால், வெள்ளை நிற கரடி தென்படுவது இதுதான் முதல்முறை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முன்னதாக, கேமராவில் தென்பட்ட வெள்ளை நிற கரடிக்கு 2 வயது இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆண் கரடியும், பெண் கரடியும் இனப்பெருக்கம் செய்யும்போது, மரபணு மாற்றங்களால் இதுபோன்ற வெள்ளை நிற கரடி பிறக்க வாய்ப்பு உண்டு என்றும், கோடியில் ஒன்றுதான் இதுபோல அமையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Published by:Janvi
First published:

Tags: America, Wild Animal