• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சமூக வலைதளத்தில் வைரலாகும் தாய்-மகள் பாசமிகு வீடியோ!

சமூக வலைதளத்தில் வைரலாகும் தாய்-மகள் பாசமிகு வீடியோ!

தாய் மற்றும் மகள்

தாய் மற்றும் மகள்

புற்றுநோயை எதிர்த்து போராடும் தனது மகளை தாய் ஆச்சரியப்படுத்துகிறாள். அன்பு நோயை எதிர்த்து போராட உதவட்டும்.

  • Share this:
    சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில உணர்ச்சிகரமான வீடியோ வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது அம்மா மற்றும் மகளின் பாசத்தை எடுத்துரைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களை கலங்க வைத்துள்ளது.

    ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்த புற்றுநோயை எதிர்த்து போராடி வரும் லூசியானா ரெபெல்லோ என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

    வீடியோவில், லூசியானா தனது தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென லூசியானாவின் தாயும் தனது தலையை மொட்டையடிக்கிறார். இருவரின் கண்களும் கலங்க லூசியானாவின் தாய் அவரது தலையில் அன்பு மிகுந்த முத்தம் ஒன்றையும் கொடுக்கிறார். இந்த வீடியோவை லூசியானா தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.



    வீடியோவின் கேப்ஷனில் லூசியானா, ``தாயின் அன்பு (தி லவ் ஆஃப் எ மதர்) என்று எழுதியுள்ளார். வீடியோவில் இரண்டு குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர். நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்த இந்த வீடியோவை இதுவரை 68,000 பேர் லைக் செய்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

    நெட்டிசன்கள், ``புற்றுநோயை எதிர்த்து போராடும் தனது மகளை தாய் ஆச்சரியப்படுத்துகிறாள். அன்பு நோயை எதிர்த்து போராட உதவட்டும்; நாங்கள் லூசியானாவுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்; புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான எல்லா வலிமையையும் அவர் பெறட்டும்” போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: