பார்லிமென்ட் முன் உடற்பயிற்சி செய்து கொண்டே நடனமாடிய பெண்! வைரல் வீடியோ
பார்லிமென்ட் முன் உடற்பயிற்சி செய்து கொண்டே நடனமாடிய பெண்! வைரல் வீடியோ
மியான்மரில் கிங் ஹின் வாய் (Khing Hnin Wai) என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு கிளிப்பை ஷேர் செய்துள்ளார். அதில் அந்த பெண் வழக்கமான ஏரோபிக்ஸ் செய்வதைக் காட்டுகிறது.
மியான்மரில் கிங் ஹின் வாய் (Khing Hnin Wai) என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு கிளிப்பை ஷேர் செய்துள்ளார். அதில் அந்த பெண் வழக்கமான ஏரோபிக்ஸ் செய்வதைக் காட்டுகிறது.
மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியை மியான்மர் ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த திங்களன்று (01-02-2020), மியான்மர் ராணுவம், மியான்மர் அரசை கலைத்து ராணுவ ஆட்சியை நிறுவியுள்ளதாக பல ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ராணுவ ஆட்சி ஒன்றும் மியான்மருக்கு புதிதல்ல என்றாலும் மியான்மரின் முகமாக அறியப்பட்ட ஆங் சான் சூகியை கைதுசெய்து வீட்டு சிறையில் வைத்தது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திங்களன்று, மியான்மரின் இராணுவம் அவசரகால நிலையை அறிவிப்பதாகவும், ஒரு வருடத்திற்கு இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்தது. இந்த செய்தி இணையத்தில் புயலை ஏற்படுத்தி வந்த வேளையில் இதே பரபரப்புடன் மியான்மரை சார்ந்த ஒரு பெண்ணின் ஏரோபிக்ஸ் வீடியோவும் இண்டர்நெட்டில் வைரலாகியுள்ளது. இப்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவத்தின் வாகனங்கள் பின்னால் சென்றுகொண்டிருப்பதுகூட தெரியாமல் ஒரு பெண் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்கிறார்.
A woman did her regular aerobics class out in open without realizing that a coup was taking place in #Myanmar. A Military convoy reaching the parliament can be seen behind the woman as she performs aerobics. Incredible! pic.twitter.com/gRnQkMshDe
மியான்மரில் கிங் ஹின் வாய் (Khing Hnin Wai) என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு கிளிப்பை ஷேர் செய்துள்ளார். அதில் அந்த பெண் வழக்கமான ஏரோபிக்ஸ் செய்வதைக் காட்டுகிறது. வீடியோவில் அந்த பெண்ணின் முதுகுக்கு பின்புறத்தில் இராணுவ வாகனங்கள் பெரும் படையாக சென்றுகொண்டிருந்தன. ஏறக்குறைய மூன்று நிமிட வீடியோவில், தன்னை ஒரு உடற்கல்வி ஆசிரியர் (Physical Education Teacher) என்று அழைக்கும் அந்தப் பெண், சாலைத் தடைக்கு முன்னால் தனது வழக்கமான வொர்க்அவுட்டைச் செய்வதைக் காணலாம், அவருக்கு பின்னால் ஒரு நெடுவரிசையாக ராணுவ வாகனங்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது அதை சற்றும் திரும்பிக்கூட பார்க்காமல் சீரியஸாக அந்த பெண் தனது வேலையை செய்துவருகிறார். அதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பல நெட்டிசன்கள் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர், ஆனால் அந்த பெண்ணோ இதை உறுதிப்படுத்த ஒரு பின்தொடர் பதிவில், அந்த சரியான இடத்தில் தான் இதற்கு முன்னர் செய்த ஒர்க்அவுட் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும், அதற்கான வீடியோ ஆதாரமும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது பற்றி அவரிடம் கேட்ட போது, பிட்னஸ் போட்டி ஒன்றிற்காக இந்த வீடியோவை எடுத்தேன். நான் காலை செய்திகளை பார்க்கவில்லை. பிறகு தான் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் தெரியும் என்றார். இதே இடத்தில் ஏரோபிக்ஸ் நடனமாடி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இராணுவ வாகனங்கள் பின்னணியில் வர, இப்பெண் ஏரோபிக்ஸ் நடனம் ஆடியதால் தான் இந்த வீடியோ இந்த அளவிற்கு பிரபலமாகி உள்ளது. இதனை அப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் ட்விட்டர் யூசர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட இந்த வீடியோ மிகவும் பிரபலமாகி உள்ளது.
Published by:Ram Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.