HOME»NEWS»INTERNATIONAL»a texas man saves his dogs life from freezing pool srs ghta

டெக்சாஸில் உறைபனி குளத்தில் விழுந்த நாய்: தயக்கமின்றி இறங்கி காப்பாற்றிய நபர்: வைரல் வீடியோ

கடும் உறைபனியையும் பொருட்படுத்தாது குளத்தில் இறங்கி நாயை காப்பாற்றியதற்காக டான் ஹோம்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

டெக்சாஸில் உறைபனி குளத்தில் விழுந்த நாய்: தயக்கமின்றி இறங்கி காப்பாற்றிய நபர்: வைரல் வீடியோ
Dog
  • Share this:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உறைபனி குளத்தில் விழுந்த தனது செல்லப்பிராணியை காப்பாற்றியதற்காக இணையத்தில் அதன் உரிமையாளர் பாராட்டுக்களை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை பனிப்புயல் தாக்கியதை தொடர்ந்து, டெக்சாஸ், லூசியானா, கென்டக்கி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் தொடர்ந்து 3 நாட்களாக பனிப்பொழிவு நீடித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவால் சுமார் 30 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

சீலிங் பேன் உள்ளிட்ட வீட்டுப்பொருட்கள் பல பனியால் உறைந்து காணப்படுகின்றன. ஏரி, குளங்கள் என அப்பகுதி முழுவதும் உறைபனி சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் உறைபனி நீச்சல் குளத்தில் விழுந்த நாயை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெக்சாஸின் சவுத்லேக்கில் வசிக்கும் டான் ஹோம்ஸ், செல்லப்பிராணிகளை வளர்க்கும் மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் பொருட்டு, தனது நாய் கிறிஸ்டி குளத்தை மூடிய பனிக்கட்டி வழியாக விழுந்த பயங்கரமான தருணத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.





தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துகொண்ட அவர் குறிப்பிட்டிருந்ததாவது, “எச்சரிக்கை, உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால் கவனமாக இருங்கள். இந்த வீடியோவைப் பாருங்கள். நான் குளத்திற்கு அருகில் இருந்ததால் எனது நாயை காப்பாற்ற முடிந்தது.என்று எழுதியிருந்தார். இந்த சம்பவம் கடந்த பிப்.15ம் தேதி நடந்துள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா மூலம் இது தொடர்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் ஹோம்ஸ் மற்றும் அவரது மனைவி வீட்டின் பின்புறத்தில் சூழ்ந்து இருந்த பனியை அகற்றும் வேலையில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது

மேலும் அங்கு இருந்த நீச்சல் குளம் பனியால் உறைந்து காணப்பட்டிருந்தது. அப்பகுதியில் அவரது 2 வளர்ப்பு நாய்கள் சுற்றி திரிந்துள்ளன. அதில் ஒன்று உறைந்து காணப்பட்ட நீச்சல் குளத்தில் உள்ளே இறங்கியது. ஆனால் குளத்தின் நடுவில் பனி மெல்லியதாக சூழ்ந்திருந்தால் நாய் தண்ணீரில் மூழ்கியது. இதனை கண்ட உரிமையாளர் நீச்சல் குளத்தில் இறங்கி நாயை காப்பாற்றினார். கடும் உறைபனி இடையே இது போன்ற சம்பவங்கள் நிகழலாம் எனவும் செல்லப்பிராணிகளை வளர்க்கும் நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அப்பகுதி மக்களுக்கு தனது வீடியோ மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்

கடும் உறைபனியையும் பொருட்படுத்தாது குளத்தில் இறங்கி நாயை காப்பாற்றியதற்காக டான் ஹோம்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது பதிவுக்கு கமெண்ட் செய்த சிலர். நல்லவேளை நீங்களும் அங்கு தான் இருந்தீர்கள். அதனால் நாயை காப்பாற்ற முடிந்தது என குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஹோம்ஸ் "குளத்தில் இறங்கிய போது கடுமையான குளிர் என் சுவாசத்தை எடுத்துச் சென்றது. இனி எந்த நேரத்திலும் அதைச் செய்ய மாட்டேன். " என்று கூறியுள்ளார்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
weight: 400;">.
Published by:Ram Sankar
First published: