Home /News /international /

இரண்டாம் எலிசபெத் ராணியின் ரகசிய கடிதம்... இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்கக் கூடாதாம்!

இரண்டாம் எலிசபெத் ராணியின் ரகசிய கடிதம்... இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்கக் கூடாதாம்!

இரண்டாம் எலிசபெத் ராணி

இரண்டாம் எலிசபெத் ராணி

Queen Elizabeth : ராணியின் ரகசிய கடிதம் சிட்னியில் பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளது என்று ஆஸ்திரேலியா ஊடகம் தெரிவித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, IndiaSydney, Australia Sydney, Australia Sydney, Australia Sydney, Australia
    இங்கிலாந்து நாட்டின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் 1986இல் எழுதிய ரகசியக் கடிதம் ஆஸ்திரேலியாவில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆஸ்திரேலியா ஊடகம் வெளியிட்ட தகவலில், இரண்டாம் எலிசபெத் ராணி எழுதிய ரகசிய கடிதம் சிட்னியில் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் அந்த கடிதத்தை இன்னும் 63 ஆண்டுகளுக்குத் திறக்கக்கூடாதாம்.

    ராணியின் ரகசிய கடிதம்:

    1986ம் ஆண்டு நவம்பர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற போது ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தை ரகசியமாக ஒரு பெட்டகத்தில் மறைத்து வைத்துள்ளனர். ராணி அதை 2085 வரை திறக்கக்கூடாது என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ரகசிய கடிதத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. ராணியின் நெருங்கிய ஆட்களுக்குக் கூட இந்த கடிதத்தைப் பற்றித் தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது இந்த செய்தியை ஆஸ்திரேலியா ஊடகம் உலகத்திற்குத் தெரிவித்துள்ளது. மேலும் ரகசிய கடிதம் கண்ணாடி  பெட்டகத்திற்குள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளது என்று கூறியுள்ளனர். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆஸ்திரேலியாவின் தலைமையாக இருப்பவர். அவரின் மறைவுக்குப் பின் தற்போது ராஜா மூன்றாம் சார்லஸ்யை தலைமையாக ஏற்றுள்ளனர்.

    Also Read : இரண்டாம் எலிசபெத்தின் இறுதி பயணம் தொடங்கியது!

    இது வரை இரண்டாம் எலிசபெத் ராணி ஆஸ்திரேலியாவிற்கு 16 முறை சென்றுள்ளார். சிட்னியின் மேயர் இது குறித்துத் தெரிவிக்கையில், 2085ம் ஆண்டு ஒரு தகுதியான நாளாகப் பார்த்து இந்த கடிதத்தை எடுத்து நாட்டு மக்களுக்கு என்னுடைய செய்தியைப் பகிரவும் என்று ராணி கூறியதாகத் தெரிவித்தார். அந்த கடிதத்தில் "எலிசபெத்.ஆர்" என்று ராணி கையொப்பம் இட்டுள்ளார்.

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதையைச் செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிட்னியின் சின்னமான ஓபரா ஹவுஸ் ஒளிரவிடப்பட்டது.
    Published by:Janvi
    First published:

    Tags: Australia, Letter, Queen Elizabeth, Sydney

    அடுத்த செய்தி