உலகின் முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லெவிஸ் (Levi's). குறிப்பாக ஜீன்ஸ் வகை ஆடைகளில் டாப் பிராண்டான லெவி நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த லெவி ஸ்ட்ராஸ் என்பவர் 1853ஆம் ஆண்டு தொடங்கினார். சுமார் 170 ஆண்டுகளுக்கு மேலாக ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின் ஆரம்ப காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் ஆடைகள் தற்போது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் சென்றுள்ளன.
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் 1880ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லெவி பிராண்ட் ஜீன்ஸ் பேன்ட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டன. கம்பெனி ஆரம்பித்த காலத்தில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் இத்தனை ஆண்டுகள் பின்பும் பெரிதாக சேதமடையாமல் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாகவே, பழமையான காலம் சென்ற பொருள்களை சேகரித்து வைப்பதில் பலர் ஆர்வம் கொண்டிருப்பார்கள். எனவே, இந்த 140 ஆண்டுகள் பழமையான ஜீன்ஸ் பேன்ட்டுகளை ஏலம் விட்டால் நல்ல தொகைக்கு செல்லும் என எதிர்பார்த்தனர்.
View this post on Instagram
தற்போது இந்த இரண்டு ஜீன்ஸ் பேன்ட்டுகளும் மெக்சிகோ நாட்டில் 87 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சத்திற்கு ஏலம் சென்றுள்ளது. இந்த ஜீன்ஸ் பேன்ட்டை பழமையான ஆடைகளை சேகரிக்கும் ஆர்வாளரான கைல் ஹாபெர்ட்(Kyle Haupert) மற்றும் சிப் ஸ்டீவன்சன்(Zip Stevenson) ஆகிய இருவர் ஏலம் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நான் ஒரு பேய், குழந்தைகளை கொன்றது நான்தான்' - 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியரின் பகீர் வாக்குமூலம்!
140 ஆண்டுகள் ஆனாலும் கிழிந்து தொங்காமல் தாக்குப்பிடித்துள்ள இந்த ஜீன்ஸ் எங்கள் நிறுவனத்தின் தரத்தை காட்டுகிறது என லெவிஸ் இதை ஏலத்தை வைத்து தனது பிராண்டை விளம்பரம் செய்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mexico, USA, Viral News