வியட்னாமில் பரவுவது இந்தியா-பிரிட்டன் கொரோனா வைரஸ் மாதிரிகளின் கூட்டுக்கலவை- WHO

உலகச் சுகாதார அமைப்பு (WHO)

ஆசிய நாடான வியட்நாமில், புதிய உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இது இந்தியா மற்றும் பிரிட்டனில் முதன் முதலில் தென்பட்ட உருமாறிய கொரோனாவின் கூட்டுக் கலவையாக உள்ளதாகவும், காற்றில் வேகமாக பரவுவதாகவும், உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

 • Share this:
  கொரோனா வைரஸ் பரவல் கடந்தாண்டு தீவிரமாக இருந்தபோது, மிகச் சிறப்பாக செயல்பட்டு, பாதிப்பை குறைத்தது, வியட்நாம். இந்நிலையில் அங்கு சமீபத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஏப்., மாதத்தில் மட்டும், 6,800 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து வியட்நாம் சுகாதார அமைச்சர் நியூயென் தன்ஷ் லாங்க் கூறியுள்ளதாவது:தற்போது வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது.

  பரிசோதனையில், அது புதிய உருமாறிய கொரோனா வகை என்பது தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டனில் முதன் முதலில் தென்பட்ட வைரஸ் வகையின் கூட்டுக் கலவையாக இது உள்ளது.இது காற்றில் மிக வேகமாக பரவுகிறது. தொண்டையில் நீண்ட நேரம் இருப்பதால், சுற்றுப் பகுதியில் மிக வேகமாக பரவுகிறது. இது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன, என்றார்.

  உலகச் சுகாதார அமைப்பின் தற்போதைய புரிதலின் படி இந்த புதுவகை கொரோனா உருமாறிய வைரஸ் பி.1.617.2 என்று கருதப்படுகிறது, இதை உலகச் சுகாதார அமைப்பு இந்திய வகை உருமாறிய வைரஸ் என்று அழைக்கிறது.

  வியட்நாம் கடந்த ஆண்டில் வெற்றிகரமாக வைரஸைக் கட்டுப்படுத்தியிருந்தது. ஆனால் ஏப்ரல் இறுதி முதல் அங்கும் கொரோனா பரவி வருகிறது.

  இதுவரை பி.1.222, பி-1 619, டி614ஜி, பிரிட்டனில் உருவான பி.1.1.7, பி.1.351, ஏ23.1 மற்றும் பி-1 617.2. இதில் கடைசியாக உள்ளதுதான் வியட்னாமில் இப்போது கண்டுப்பிடிக்கபட்டுள்ளது.

  இதன் மரபணு தொடர் வரிசைமுறையை விரைவில் வியட்னாம் ஆய்வுக்கு அனுப்பும். இது மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஆபத்தானது விரைவு கதியில் பரவக்கூடியது என்று வியட்னாம் தெரிவித்துள்ளது.

  சோதனைச் சாலையில் பார்த்த போது இந்த வைரஸ் தன்னை வெகு விரைவில் இரட்டிப்பாக்கிக் கொள்வது தெரியவந்துள்ளது. இதனால்தான் வியட்னாமில் வேகமாக புதிய கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்சின் போடும் திட்டத்தை பரவலாக்க வியட்னாம் முடிவெடுத்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: