முகப்பு /செய்தி /உலகம் / உயிர் பிழைப்பதே அதிர்ஷ்டம் என்ற நிலையில் மன தைரியத்தால் மறுவாழ்வு பெற்ற நம்பிக்கை மனிதர்..

உயிர் பிழைப்பதே அதிர்ஷ்டம் என்ற நிலையில் மன தைரியத்தால் மறுவாழ்வு பெற்ற நம்பிக்கை மனிதர்..

 தீவிபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட டிமியோவுக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக கை மற்றும் முகம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் டிமியோ, இப்பொழுது முன்னர் இருந்தது போலவே மகிழ்வான தருணங்களை அனுபவித்து வருகிறார். 

தீவிபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட டிமியோவுக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக கை மற்றும் முகம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் டிமியோ, இப்பொழுது முன்னர் இருந்தது போலவே மகிழ்வான தருணங்களை அனுபவித்து வருகிறார். 

தீவிபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட டிமியோவுக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக கை மற்றும் முகம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் டிமியோ, இப்பொழுது முன்னர் இருந்தது போலவே மகிழ்வான தருணங்களை அனுபவித்து வருகிறார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயதான ஜோ டிமியோ (Joe DiMeo) என்பவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால், டிமியோவின் கை மற்றும் முகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால், வெளி உலகிற்கு தலைகாட்டாமல் நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது தீவிபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட டிமியோவுக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக கை மற்றும் முகம் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் டிமியோ, இப்பொழுது முன்னர் இருந்தது போலவே மகிழ்வான தருணங்களை அனுபவித்து வருகிறார். 

தனது கைகளிலும் முகத்திலும், வெதுவெதுப்பான, குளிர்ச்சியான, தனக்கு எதிரே இருப்பவரின் தொடுதல் உட்பட பல்வேறு விதமான உணர்வுகளை மீண்டும் ரசித்து  வருகிறார். மறுவாழ்வுக்கான ஒரு நாள் நிச்சயம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களை கழித்துவந்தவரின் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "தற்போது நான் எதையாவது தொடும் பொழுது, முதன் முதலாக ஒரு பொருளைத் தொடும் உணர்வை நான் பெறுகிறேன்” என்று கூறினார். நியூஜெர்சியில் கிளார்க் டவுன்ஷிப்பில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, மீண்டும் பழைய மாதிரி ஜாலியாக காரை ஓட்டவேண்டும் என்ற குறிக்கோளை டிமியோ கொண்டிருந்தார். 

, ``நான் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை, என் மீது நம்பிக்கை வைத்து நான் என் முன் இருக்கும் படி கற்களை தாண்டிவருகிறேன். என் குறிக்கோள் தான் என்னை தினமும் உத்வேகப்படுத்துகிறது” என்று டிமியோ கூறியுள்ளார். மேலும் ``வாகனம் ஓட்டுவது தான் இதுவரை எனக்கு கிடைத்த மிகப்பெரிய நிம்மதி" என்று அவர் தெரிவித்துள்ளார். ஜூலை 14, 2018 அன்று தயாரிப்பு சோதனையாளராக (product tester) தனது நைட்-ஷிப்ட் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய டிமியோவின் கார் விபத்துக்குள்ளானது, டிமியோவின் கார் உருண்டு சின்னாபின்னமாக வெடித்துச்சிதறியது. அவரது உடலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுடன் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவர் நியூ ஜெர்சியில் லிவிங்ஸ்டனில் உள்ள செயிண்ட் பர்னபாஸ் மருத்துவ மையத்தில் தீக்காய பிரிவில் நான்கு மாதங்கள் கோமாவில் இருந்தார், சுமார் 20 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.  ஆனாலும் டிமியோவின் கை மட்டும் முகம் மோசமாக இருந்தது. உயிர் பிழைப்பது அதிர்ஷ்டம் என்ற நிலையில், டிமியோ 2019 மார்ச்சில் NYU லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவரான டாக்டர் எட்வர்டோ ரோட்ரிகஸை சந்தித்து ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டார், அதற்கு முன்னரும் கூட மூன்று வெற்றிகரமான முக மாற்று சிகிச்சைகளை டிமியோ கொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று , ரோட்ரிக்ஸ், 140 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களைக் கொண்ட ஒரு குழு 23 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர். இது டிமியோவுக்கு ஒரு புதிய முகத்தையும் 2 கைகளையும் கொடுத்தது. "நாங்கள் அவரை உலகிற்கு அழகாகக் காட்ட ஒரு ஆபரேஷனை மட்டும் செய்ய விரும்பினோம், ஆனால் அது இறுதியில் சிறப்பாக அமைந்துவிட்டது. குறிப்பாக கைகள் நல்ல நிலையில் உள்ளது" என்று மருத்துவர் ரோட்ரிக்ஸ் கூறினார். டிமியோவிற்கு ஒரு நாளைக்கு ஐந்து மணிநேர ட்ரைனிங் கொடுக்கப்படுகிறது. 

அதிலும் அவர் நல்ல முன்னேற்றத்தை அடைந்துவருகிறார் என்று ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். என் இத்தனை வருட அனுபவத்தில் இது போன்ற ஒரு நோயாளியை நான் கண்டதில்லை. டிமியோவின் அயராத உடற்பயிற்சியும் சிகிச்சைக்கு ஒத்துவரும் அவருடைய மன திடமும் தான் அவரை வேகமாக குணமடைய வைக்கிறது. பொதுவாக எந்த ஒரு நோயுமே நோயாளியின் ஈடுபாடில்லாமல் சாத்தியமாகாது. அந்தவகையில் டிமியோவின் முழு ஈடுபாடும் தான் இந்த சிகிச்சையின் வெற்றிக்கு காரணம் என்று மருத்துவர் ரோட்ரிக்ஸ் மட்டுமல்லாது பலரும் கூறி வருகின்றனர். இப்பொழுது தன் பெரும்பான்மையான வேலைகளை டிமியோவே செய்துவருகிறார். குறிப்பாக காலை உணவுகளை உட்கொள்வது உடற்பயிற்சிகளை செய்வது நடப்பது முதற்கொண்டு அவரால் முடிந்த வேலைகளை அவரே செய்து தினமும் தன்னை இந்த உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாற்றிவருகிறார்.

First published:

Tags: Faith, Hope, NewYork, Positive thinking, Positive Thought