ஹோம் /நியூஸ் /உலகம் /

பூமியின் நடுவில் மாபெரும் பெருங்கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்...

பூமியின் நடுவில் மாபெரும் பெருங்கடலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்...

பூமிக்கு நடுவில் கடல் ( மாதிரிப்படம்)

பூமிக்கு நடுவில் கடல் ( மாதிரிப்படம்)

பூமியின் நடுப் பகுதியில் பெருங்கடல் உள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பூமியின் நடுப் பகுதியில் பெருங்கடல் உள்ளதாகவும் அது கிட்டத்தட்ட மேல் பரப்பில் உள்ளதை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கலாம் என்று புதிய ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

  உலகளாவிய ஆராய்ச்சியாக விஞ்ஞானிகள் இணைந்து 660 மீட்டர் பூமியின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை வைத்து ஆராய்ச்சி செய்தனர். அதில் பூமிக்குச் சரியாக நடுப்பகுதியில் நீர்த்தேக்கம் இருப்பதற்காகச் சான்றுகள் தென்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

  இந்த ஆராய்ச்சியில் ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் FTIR ஸ்பெக்ட்ரோமெட்ரி என்ற தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜூல்ஸ் வெர்ன் என்றவரால் சொல்லப்பட்ட  ‘பூமிக்குள் கடல் உள்ளது’ என்ற கோட்பாட்டை இது உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது குறித்து ஃபிராங்க்ஃபர்ட்டில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் கல்வி நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபிராங்க் ப்ரெங்கர் தெரிவிக்கையில், மாற்று மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் பெரிய அளவிலான இடம் உள்ளது. அங்கு நீர் இருப்பதற்காகச் சான்றுகள் தென்படுகிறது என்று கூறியுள்ளார்.

  Also Read : Nobel Prize : 2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு!

  மேலும் அங்கு நீர் தான் உள்ளது என்று உறுதியாகச் சொல்ல இயலாது, நீர் ஈர்ப்புத் தன்மை இருப்பினும் அங்கு என்ன உள்ளது என்று சரியாகத் தெரியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

  அங்குப் பெரிய அளவில் பெருங்கடலும் இருக்கலாம் அல்லது நீர்நிலை பாறை மட்டும் கூட இருக்கலாம் என்று அவரின் கருத்தாகத் தெரிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Research, Water