லண்டனில் உள்ள a pop-up food joint, சோசியல் மீடியாவில் இன்ஃப்ளூயன்சராக இருக்கும் ஒருவருக்கு ஒரு சரியான பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது. இன்ஃப்ளூயன்சர் ஒருவர் தனது தொழிலை முன்னிறுத்தி சில நன்மைகளைப் பெற முயன்றுள்ளார். அதற்கு ரெஸ்ட்டாரெண்ட் தரப்பில் சரி, வந்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி பின்னர் அந்த இன்ஃப்ளூயன்சரை ‘விருந்தோம்பல் தொழிலுக்கு எதிரான குற்றங்களுக்காக’ (crimes against the hospitality industry) அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஃபோர் லெக்ஸ் என்ற சோசியல் மீடியாக்காரார் இன்ஸ்டாகிராமில் தனது சாட்டின் தொடர்ச்சியான வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
தனது தொழிலை பிரபலப்படுத்த ரெஸ்ட்டாரெண்டில் இலவசமாக உணவை கேட்பதா என்று பலரும் கேள்வியும் கிண்டலையும் கமெண்ட் பிரிவில் கேட்டுள்ளனர். கிறிஸ்டோபர் ஜெஸ்ஸி ஓகான் என்ற இண்டெர்நெட் இன்ஃப்ளூயன்சர், இன்ஸ்டாவில் 50,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருப்பதாகக் கூறி, தனது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதற்கு ரெஸ்ட்டாரெண்டில் இலவசமாக உணவை கேட்டுள்ளார்.
தன்னைப் பின்தொடர்பவர்களை உங்களின் வலைத்தளத்திற்கு அனுப்ப ஸ்வைப் அப் லிங்க்கையும் வைப்பேன் என்றார். அதற்கு அங்குள்ள செஃப்களும் ஒப்புக்கொண்டு, இஸ்லிங்டனில் உள்ள டோல்பட்ல் தெருவில் இருந்து உணவைப் பெற வரச் சொல்லியுள்ளனர். இண்டெர்நெட் இன்ஃப்ளூயன்சரும் தான் கேட்டது போல் இலவச உணவை பெறப்போகிறோம் என்று நினைத்து, குறிப்பிட்ட முகவரியிலிருந்து பார்சல்களை எடுக்க ஒப்புக்கொண்டார்.
பின்னர், ரெஸ்ட்டாரெண்டை சார்ந்த செப்கள் அவரை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ‘விருந்தோம்பல் தொழிலுக்கு எதிரான குற்றங்களுக்காக’ இன்ஃப்ளூயன்சர் மீது புகாரளித்தனர்.
View this post on Instagram
இந்த போஸ்ட் உண்மையில் நெட்டிசன்களை சிரிக்க வைத்தது. இண்டர்நெட்டில் பயங்கர வைரலாக பரவி வரும் இந்த போஸ்ட்டிற்கு 34,000 க்கும் மேற்பட்ட லைக்குகளும் நூற்றுக்கணக்கான கமெண்டுகளும் கிடைத்துள்ளன. ஒரு யூசர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “நீங்கள் இன்ஃப்ளூயன்சரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிப்போகும் CCTV காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்போது அவரின் ரீயாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க நான் விரும்புகிறேன்” என்றார். மற்றொரு யூசர் “இதை நான் உண்மையில் லைக் செய்கிறேன்!!! இதை அம்பலப்படுத்தியதற்கு தேங்க்ஸ், இருந்தும் இது முற்றிலும் அருவருப்பான நடத்தை” என்று அவர் கூறினார்.
இண்டெர்நெட் இன்ஃப்ளூயன்சர் கருத்துப் பிரிவை அணுகினார், மேலும் அவர் தனது பங்கிற்கு, தான் உணவைக் கொண்டு ரெஸ்ட்டாரெண்டை பற்றி விவரிக்கவே விரும்பியதாகவும் அதற்கு தான் ஒரு உணவை கேட்டதாகவும் கூறினார். உணவிற்கு தான் ரெஸ்ட்டாரெண்ட்டை கட்டாயப்படுத்தவில்லை என்றார். ரெஸ்ட்டாரெண்ட்காரர்கள் தனக்கு உணவை வழங்க விரும்பவில்லை என்றால் அவர்கள் அதை மறுத்திருக்கலாம். சமூக ஊடகங்களில் சாட்டை பகிர்ந்ததற்காகவும், பொதுவில் தன்னை அவமதித்ததற்காகவும் அவர் ரெஸ்ட்டாரெண்ட்டை அவதூறாகப் பேசினார்.
கோவிட் -19 தொற்றுநோய் ஹோட்டல் துறையை கடுமையாக பாதித்துள்ளது. இந்த துறையை சார்ந்த ஊழியர்கள் மோசமான துன்பங்களை எதிர்கொண்டனர். அவர்கள் ஏற்கனவே ஒரு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் இப்போதைய காலத்தில் பிரீயாக உணவைக் கேட்பது சிறந்த யோசனை அல்ல. பல உணவகங்களும் இந்த இன்ஃப்ளூயன்சரின் நடத்தைக்கு தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Influencer, London, Restaurant