Home /News /international /

ரூ.70 கோடி போனஸ்... ஊழியர்களை மகிழ்ச்சியில் மயங்க வைத்த நிறுவனம்..!

ரூ.70 கோடி போனஸ்... ஊழியர்களை மகிழ்ச்சியில் மயங்க வைத்த நிறுவனம்..!

  • News18
  • Last Updated :
    கிறிஸ்துமஸ் பண்டியையை ஒட்டி ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.70 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் செயிண்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் எனும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை இம்மாதம் கொண்டாடப்படுவதை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

    விருந்தில் பங்கேற்ற சுமார் 200 ஊழியர்களுக்கு சிவப்பு நிற உறைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஊழியர்களின் மத்தியில் அந்த நிறுவனத்தின் தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான் உரையாற்றினார். அப்போது அவர் ஊழியர்களிடம் தங்களது கையில் உள்ள சிவப்பு நிற உறைகளை பிரித்துப் பார்க்கச் சொன்னார்.

    தலைவரின் விருப்பத்தை ஏற்று உறைகளை பிரித்து பார்த்த ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த உறைகளில் அவரவருக்கான கிறிஸ்துமஸ் போனஸ் தொகை கொடுக்கப்பட்டிருந்தது.

    மகிழ்ச்சியில் ஊழியர்கள்


    ஒவ்வொரு ஊழியருக்கும் அவர்களது பணி அனுபவம் அடிப்படையில் போனஸ் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 100 டாலர்கள் முதல் அதிகபட்சமாக 2 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளது.

    ஒட்டு மொத்தமாக 200 ஊழியர்களுக்கு 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.70 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம்) போனஸ் வழங்கப்பட்டு உள்ளது.
    Published by:Sankar
    First published:

    அடுத்த செய்தி