முகப்பு /செய்தி /உலகம் / வளர்த்தவரை அடித்துக் கொன்ற கங்காரூ..ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

வளர்த்தவரை அடித்துக் கொன்ற கங்காரூ..ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

வளர்த்தவரையே அடித்துக் கொன்ற கங்காரூ

வளர்த்தவரையே அடித்துக் கொன்ற கங்காரூ

சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நபர் தற்போது கங்காரூ தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என ஆஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaCanberraCanberraCanberraCanberraCanberraCanberra

ஆஸ்திரேலியாவில் கங்காரு ஒன்று அவரை வளர்த்தவரையே அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடையாளமாக திகழ்வது அந்நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை விலங்கான கங்காரு. இதற்காகவே அந்நாட்டை கங்காரு தேசம் என்று அழைப்பது உண்டு.

இந்த ஆஸ்திரேலியாவில் கங்காரு குட்டிகளை சிலர் செல்லப் பிராணியாக வளர்க்கும் வழக்கமும் கொண்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ரெட்மோன்ட் என்ற பகுதியில் ஒரு நபர் கங்காரூவை வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 77 வயதான இந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் படுகாயங்களுடன் நினைவற்ற நிலையில் இருந்துள்ளார். இவரின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் இவர் இந்த நிலைமையில் இருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இருப்பினும் சிகிச்சை பலனிற்றி பரிதபமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு இவரின் வளர்ப்பு பிராணியான கங்காரூ தாக்கியதே காரணம் என விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு இவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்த போது அதற்கு வழி விடாமல் கங்காரூ தடுத்து தொல்லை செய்துள்ளது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லமால் காவல்துறையை வரவழைத்து விலங்கை சுட்டுக் கொன்று தான் இவர்கள் அந்நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: ஆகாய வெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ.. நிலவு வடிவில் அல்ட்ரா சொகுசு ரெசார்ட் - விண்வெளி அனுபவம் விரைவில் துபாயில்

இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 1936ஆம் ஆண்டில் தான் கடைசியாக கங்காரூ தாக்கி ஒரு நபர் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்தார். சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நபர் தற்போது கங்காரூ தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என ஆஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் சுமார் 5 கோடி கங்காரூக்கள் உள்ளன. இவை சராசரியாக 70 கிலோ எடையும் 2 மீட்டர் உயரமும் கொண்டவை.

First published:

Tags: Australia, Kangaroo, Pet Animal