தம்பி பாப்பா வேணாம்... தங்கைதான் வேணும் - பெற்றோர்களிடம் அழுது கொஞ்சும் மழலையின் க்யூட் வீடியோ

தந்தை

ஒரு சில பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் நிகழ்வில் தடபுடலான விருந்துகளுடன் பலரையும் அழைத்து விழாவை சிறப்பிப்பர். வெகு சிலர் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் மட்டுமே விழாவை சிம்பிளாக கொண்டாடுவர். 

  • Share this:
இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம். ஆனால் வெளிநாடுகளில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்று. மேற்கத்திய நாடுகளில் குழந்தை கருவில் இருக்கும் போதே அந்த குழந்தையை பெறப்போகும் பெற்றோர்கள் தங்கள் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஒரு விழா வைத்து அந்த விழாவில் சொந்த பந்தங்களுக்கு அறிவிப்பார்கள். ஒரு சில பெற்றோர்கள் தங்களின் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் நிகழ்வில் தடபுடலான விருந்துகளுடன் பலரையும் அழைத்து விழாவை சிறப்பிப்பர். வெகு சிலர் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் மட்டுமே விழாவை சிம்பிளாக கொண்டாடுவர். 

இந்த நிகழ்வு பல நாடுகளில் நீண்ட காலமாக நடத்தப்படுகிறது. குழந்தையின் பாலின அறிவிப்பு விழாவிற்கு உறவினர்களுக்கு என்ன குழந்தை என்று கூறாமல் விழாவிற்கு அழைக்கப்படுவார்கள். விழாவின் போது தங்கள் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் அவர்கள் அந்த அறிவிப்பின் போது பயன்படுத்தப்படும் கலர் தான் மிக முக்கியமானதாக இருக்கும். 

பிங்க் நிறம் பெண் குழந்தையையும், நீல நிறம் ஆண் குழந்தையையும் குறிக்கும். இந்த நிலையில் ஜெம்மா பேலிஃப் நியூபி என்பவர் ஷேர் செய்த ஒரு YouTube வீடியோவின் தொடக்கத்தில் குழந்தையின் தந்தை, பார்ட்டி பூப்பரை தவறான டைரெக்க்ஷனில் திறந்தபின் அது படக்கூடாத இடத்தில் பட்டு அவரை கதிகலங்க வைத்துவிட்டது. குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வை தம்பதிகள் தங்கள் வீட்டு ஹாலில் நிகழ்த்தியுள்ளனர். இந்த வீடியோ கிளிப்பின் துவக்கத்தில் தம்பதியினர் தங்களின் மகளுக்கு, விழாவில் வெளிபடுத்தப்படும் கலர் பலூன் பிங்க் நிறம் என்றால் அது ஒரு பெண் குழந்தை என்றும் நீல நிறத்தில் இருந்தால் அது ஆண் என்றும் கூறினர். 

விழா தொடங்கிய கொஞ்ச நேரத்தில், குழந்தையின் தாயார் மகிழ்ச்சியுடன் நீல பலூன்களை எடுத்து அந்த பெண் குழந்தையிடம் கொடுக்கிறார். இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும்போது, குழந்தையின் தந்தை அமர்ந்துகொண்டு பார்ட்டி பூப்பரைத் திறக்க முயற்சிக்கிறார். ரொம்ப நேரம் போராடியும் பார்ட்டி பூப்பர் ஓபன் ஆவதாக தெரியவில்லை. சில முயற்சிகளுக்குப் பிறகு, அவர் பூப்பரின் டைரெக் ஷனை மாற்றுகிறார், பின்னர் அவர் படும் வேதனை கீழுள்ள வீடியோவில் நீங்களே காணலாம்.பிறகு நிலைமையை எப்படியோ சமாளித்துக்கொண்டு தரையிலிருந்து எழுந்து, நீல நிற கான்ஃபெட்டியை காற்றில் வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் குழந்தையிடம் நீலநிற பலூன் எதைக் குறிக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த குழந்தையோ நீல நிறம் என்றால் அது பெண் குழந்தை என்று கூறியது. பெற்றோர்களோ இல்லை நீல நிறம் என்றால் உன் தம்பியை குறிக்கிறது என்று கூறினார்கள். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த அந்த சிறுமி எனக்கு தம்பி பாப்பா வேண்டாம் எனக்கு தங்கை தான் வேண்டும் என்று சோபாவில் அமர்ந்துகொண்டு அழத்தொடங்கியது. 

பின்னர் தன் தாயிடம் சென்று கட்டி அழுது எனக்கு தம்பி வேண்டாம் தங்கை தான் வேண்டும் என்று தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இந்த மகிழ்ச்சியான விழாவில் தந்தைக்கு கிடைத்த பூப்பர் பரிசுடன் இந்த குழந்தையின் ஏமாற்றம் உண்மையில் பெற்றோர்களை வருத்தமடைய செய்தது. இந்த வீடியோ YouTubeல் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வைரல் கிளிப்பின் விளக்கத்தில், "நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை பல விஷயங்கள் தவறாக நடந்துகொண்டிருந்தது. வீடியோவை இறுதி வரை பாருங்கள்!" என்று எழுதியிருந்தார். உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: