Home /News /international /

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 550 நாட்களுக்குப் பிறகு குணமடைந்த நபர்- ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 550 நாட்களுக்குப் பிறகு குணமடைந்த நபர்- ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் 550 நாட்களுக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் மரணப்படுக்கையில், இருந்த அவர், மீண்டுள்ளார்.

    உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிய கொரோனா வைரஸ் ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் பதம் பார்த்தது. மருத்துவ வசதி இல்லாத நாடுகளில், கொத்துக் கொத்துக்காக ஏராளமானோர் நோய் தொற்றுக்கு இரையாகினர். பலர், மருத்துவமனைகளில் 10 முதல் 15 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஆனால், குடும்பத்தினரை பிரிந்திருந்த அந்த காலம் சிறைவாசம் போல இருந்ததாக வேதனை தெரிவித்தனர்.

    இப்படி ஒவ்வொருக்கும் கொரோனா புதுப்புது அனுபவத்தை ஏற்படுத்தி தந்த நிலையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 550 நாட்களுக்கு பின் குணமடைந்திருக்கிறார் ஒருவர்.

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தின் ரோஸ்வெல் நகரை சேர்ந்தவர் டோன்னல் ஹண்டர். கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா வைரசால் அவருக்கு தீவிர காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றவுடன் காரில் இருந்து இறங்க முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மூச்சு பேச்சின்றி கிடந்த ஹண்டருக்கு, ஐசியூவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த ஹண்டருக்கு, ஒன்றிரண்டு மாதங்கள் அல்ல..., ஓராண்டு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, கை, கால்கள் செயல் இழந்த நிலையில், வழக்கமாக அவர் செய்யும் பணிகளையே மறந்தார். கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய ஹண்டருக்கு மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால், படிப்படியாக குணமடைந்தார்.

    சுமார் 9 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர் கடைசியாக, கிண்ட்ரட் மருத்துவமனையில் இருந்து கடந்த வாரம் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். கிட்டத்தட்ட பச்சிளம் குழந்தையை போல் தமது கணவர் மாறிவிட்டதாகவும், சாப்பிடுவது, உணவை விழுங்குவது எப்படி என்பதை கூட கற்றுக் கொடுத்ததாகவும், தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஹண்டரின் மனைவி ஆஷ்லி.

    ரஷ்ய ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் Z குறியீடு - அதன் பின்னணி என்ன?

    ஓராண்டு மயக்க நிலையில் இருந்ததால் பேச்சு வரவில்லை என்றும், பின்னர் சிறப்பு பயிற்சி அளித்த பின்பே கணவர் பேசியதாகவும் கூறுகிறார் ஆஷ்லி. தாம் உயிர் பிழைத்தது எப்படி என மருத்துவர்களே ஆச்சரியம் அடைந்ததாக குறிப்பிடும் ஹண்டர், கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உருக்கத்துடன் கூறியுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona

    அடுத்த செய்தி