பிரிட்டனை உலுக்கும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் வகை: தடுப்பூசி பயனளிக்குமா?

பிரிட்டனை உலுக்கும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் வகை: தடுப்பூசி பயனளிக்குமா?

பிரிட்டனில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகைமாதிரியான VUI-202012/01 என்பது அங்கு புதிய கவலைகளையும் பீதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகைமாதிரியான VUI-202012/01 என்பது அங்கு புதிய கவலைகளையும் பீதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய நாவல் கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனில் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் புதிய வகைமாதிரியான VUI-202012/01 என்பது அங்கு புதிய கவலைகளையும் பீதிகளையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, இது நாவல் கொரோனா வைரஸை விட 70% அதிகம் பரவக்கூடியது என்று தரவுகள் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுதும் நாவல் கொரோனா வைரஸின் பலதரப்பட்ட புதிய வகைமாதிரிகள் பரவி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் பிரிட்டனில் பரவும் இந்த புதிய வகைமாதிரி மற்ற மாதிரிகளை விட அதிவேகமாகப் பரவக்கூடியது என்று நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கைகள் உலகச் சுகாதார அமைப்புக்கும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த புதிய கொரோனா வைரஸ் வகை அதிவேகமாக பரவும் சாத்தியக்கூறுகள் கொண்டதெனினும் தீவிர நோயையோ, மரணத்தையோ விளைவிப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை பேராசிரியரும் வைரல் ஆய்வாளருமான ஸ்டூவர்ட் நீல் என்பவர் தி கார்டியன் நாளிதழுக்குக் கூறும்போது, சில வாரங்களுக்கு முன்பாக இந்த புதிய கொரோனா வகை லண்டனின் சில பகுதிகளில் 10-15% நோயாளிகளில் இருந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டது, ஆனால் தற்போது 60% ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் வைரஸின் உருவம் மற்றும் தன்மை மாற்றம் என்பது வைரஸ் இரட்டிப்பாகும் போது மரபணு தொடரில் ஏற்படும் மாற்றமாகும். இந்த செல்லில் கொரோனா வைரஸ் பீடித்துள்ளதோ அந்த செல்லில் மரபணு மூலக்கூறை செலுத்தும், அப்போது உடல் செல் வைரஸ் தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்வதை எதிர்த்துப் போராடும், ஆனாலும் இந்த வைரஸ் வகை அதையும் மீறி தன்னை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கண்டுப்பிடித்துக் கொள்ளும். இதன் மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டு வளர்ச்சியடையும்.

நாவல் கொரோனா வைரஸ் இதுவரை தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான மாற்றங்களை அடைந்திருந்தாலும் ஆனால் இவற்றில் சில வகைகள் மட்டுமே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டனில் உருவானது போலவே உருவான இன்னொரு கொரோனா வகை வைரஸ் அங்கு இரண்டாம் அலை பரவலுக்குக் காரணமாக அமைந்தது. 501.V2 என்று அழைக்கப்படும் இந்த கொரோனா வகை மாதிரி பிற தீரா நோய்கள் இல்லாத இளைஞர்களிடத்திலும் தென் ஆப்பிரிக்காவில் தீவிர நோயை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் D614G என்ற வகைமாதிரி பரவியது. இது உடனடியாக பெரிய அளவில் பரவியதற்குக் காரணமாக அமைந்தது.

தற்போதைய வாக்சின் இந்த புதிய கரோனாவைத் தடுக்குமா?

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது, இப்போதைய கேள்வி என்னவெனில் இது இந்தப் புதிய கொரோனா ஸ்ட்ரெய்னைத் தடுக்குமா என்பதே.

இந்தப் புதிய கொரோனா வகை மாதிரியின் ஸ்பைக் புரோட்டீன் மனித உடலின் செல்களை ஊடுருவும் தன்மை கொண்டது. இது ACE-2 என்ற ரிசப்டாருடன் ஊடாடக்கூடியது என்பதே விஞ்ஞானிகளின் கவலையாக உள்ளது. வாக்சின்கள் இந்த ஸ்பைக் புரோட்டீனின் மீதுதான் செயல்படும். ஆகவேதான் வைரஸ் இரட்டிப்படையும் போது மாறிக்கொண்டேயிருப்பது வாக்சின் பலனை தடுக்கும் என்று விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.
Published by:Muthukumar
First published: