Home /News /international /

ராணி எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள்

ராணி எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெற்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகள்

தனது வாழ்நாளில் 70 ஆண்டுகள் ராணி பட்டம் ஏற்று பொறுப்பில் இருந்தார் எலிசபெத்

தனது வாழ்நாளில் 70 ஆண்டுகள் ராணி பட்டம் ஏற்று பொறுப்பில் இருந்தார் எலிசபெத்

ராணி எலிசபெத்தின் 70 ஆண்டு ஆட்சி காலத்தில் உலகம் சந்தித்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • int, IndiaLondonLondon
  பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். 96 வயதான பிரிட்டன் மகாராணி எலிசபெத், ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.மருத்துவர்கள் தொடர் சிசிச்சை அளித்த நிலையில், கவலைக்கிடமாக இருந்த ராணி சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.

  96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார். இவரின் 70 ஆண்டு ஆட்சி காலத்தில் உலகம் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை கடந்து சென்றுள்ளது.

  1953 பதவியேற்பு - எலிசபெத் கென்யாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அவர் தந்தை ஜார்ஜ் 6 காலமானார். அதைத் தொடர்ந்து 1952 பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி இவர் ராணியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ஓராண்டு காலம் வரை இவர் அதிகாரப்பூர்வமாக பட்டம் ஏற்கவில்லை.

  1963 அதிபர் கென்னடி படுகொலை - அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி மற்றும் அவரது மனைவி ஜாக்குலின் 1961ஆம் ஆண்டு பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று ராணியுடன் விருந்தில் பங்கேற்றனர். ஆனால் 1963ஆம் ஆண்டு கென்னடி டெக்சாஸில் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு ராணி இரங்கல் தெரிவித்ததுடன் பிரிட்டன் நாட்டில் அவருக்கு நினைவகம் எழுப்பினார். அதை அவரது மனைவியே திறந்து வைத்தார்.

  1966 ஆபர்பேன் பேரழிவு - பிரட்டன் நாட்டின் வரலாற்றில் 1966ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி மாபெரும் சுரங்க பேரழிவு ஏற்பட்டது. சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஆபர்பேன் கிராமத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 116 குழந்தைகள் மற்றும் 28 பெரியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேரிடர் நிகழ்ந்தவுடன் அங்கு சென்றால் மீட்பு பணிகள் பாதிக்கப்படும் என எட்டு நாள் கழித்து அங்கு சென்று ஆறுதல் தெரிவித்தார் ராணி.

  1969 நிலவில் மனிதன் காலடி - 1969ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் அல்ட்ரின் நிலவில் காலடி வைத்து வரலாற்று சாதனை படைத்தனர். இவர்களை, பிரிட்டன் மக்கள் சார்பாக ராணி எலிசபெத் வாழ்த்தினார்.

  1977 வெள்ளி விழா - தான் ஆட்சி பொறுப்பேற்று வெள்ளி விழா கொண்டாட்டத்தை 1977-ம் ஆண்டு முழுவதும் ராணி பல்வேறு நிகழ்வுகள் மூலம் கொண்டாடினார்.

  இதையும் படிங்க: 70 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் - அரண்மனை முன்பு மக்கள் கண்ணீர் அஞ்சலி..

  1979 பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் - பிரிட்டன் நாட்டின் முதல் பெண் பிரதமராக 1979ஆம் ஆண்டு மார்க்ரெட் தச்சர் பதவியேற்றார். இவர் 1990 வரை சுமார் 11 ஆண்டு பிரதமராக செயல்பட்டார்.

  1981 சார்லஸ் டயானா திருமணம் -1981ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி செயின்ட் பால் தேவாலயத்தில் நடைபெற்ற இளவரசர் சார்லஸ் மற்றும் டையானா தம்பதி திருமணத்தை சுமார் 750 பேர் நேரில் பார்த்தனர்.

  1986 செர்னோபில் பேரிடர் - வரலாற்றில் மிக மோசமான அணு உலை பேரிடரான செர்னோபில் பேரிடர் அன்றை சோவியத் ரஷ்யாவான வடக்கு உக்ரைனில் ஏற்பட்டது.

  1989 பெர்லின் சுவர் வீழ்ச்சி - சோவியத் ரஷ்யா உடைந்ததன் முக்கிய குறியீடாக கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு குறுக்கே இருந்த பெர்லின் சுவர் போராட்டக்காரர்களால் 1989ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி உடைக்கப்பட்டது.

  1997 இளவரசி டயானா மரணம் - 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இளவரசி டயானா கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  2001 அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் - 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அமெரிக்காவுக்கு ஆறுதல் தெரிவித்த ராணி அந்நாட்டிற்கு மரியாதை செலுத்தும் விதமாக பங்கிங்காம் அரண்மனையில் உள்ள ராணுவ பேன்டை அமெரிக்க தேசிய கீதம் வாசிக்க வைத்தார்.

  2002 தங்க விழா - தான் ஆட்சி பொறுப்பேற்று தங்க விழா கொண்டாட்டத்தை 2002-ம் ஆண்டு முழுவதும் ராணி பல்வேறு நிகழ்வுகள் மூலம் கொண்டாடினார்.

  2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் - எலிசபெத் ராணியின் வைர விழா கொண்டாட்டமும், 2012ஆம் ஆண்டு அந்நாட்டில் ஒலிம்பிக்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

  2016 பிரெக்சிட் - 2016ஆம் ஆண்டு ஜூன் 23, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் மக்கள் வாக்கெடுப்பு மூலம் வெளியேறியது.

  2020 கோவிட்-19 - 2020ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உலகமே லாக்டவுனுக்குள் சென்றது.

  2021 இளவரசர் பிலிப் மரணம் - எலிசபெத் ராணியின் கணவரான பிலிப் 2021 ஏப்ரல் 17 காலமானார். கோவிட்-19 கட்டுப்பாடுகளுடன் இவரின் இறுதி சடங்குகள் நடைபெற்றது.
  Published by:Kannan V
  First published:

  Tags: Britain, History, Queen Elizabeth

  அடுத்த செய்தி