Home /News /international /

எதிர்காலம் பெண்களின் கையில்... உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்! 

எதிர்காலம் பெண்களின் கையில்... உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்! 

பெண் தலைவர்கள்

பெண் தலைவர்கள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைவர்களை பற்றி தெரியுமா..

பெண் அன்பின் ஸ்வரூபம், சக்தியின் மூலம், குடும்பத்தின் சுமைதாங்கி, கற்பகதரு, கம்ப்யூட்டர் யுவதி. உலகை தன் அறிவால், ஆற்றலால், அழகால் வலம் வருபவள். வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் நுாறு பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், முதல் புறக்கணிப்பிலே 90 சதவீதம் பேர் நின்று விடுகிறார்கள். ஆனால் இன்றோ உலகில் பாதிக்கும் அதிகமான பெண்கள் அரசியலில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சக்திவாய்ந்த பெண்களை பற்றி இப்போது காண்போம்.

 

சன்னா மரின் :உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணியாக அண்மைக்காலமாக பேசப்பட்டு வருபவர், அரசியலுக்கு வந்து ஏழே ஆண்டுகளில் பின்லாந்தின் பிரதமரான, 'இளம் பெண் பிரதமர்' என்ற சிறப்பைப் பெற்ற சன்னா மரின் (34) ஆவார். இவருக்கு முன்பாக நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா அர்டேர்ன் குறைந்த வயதில் பிரதமர் ஆனவர். 'நான் சமுதாயத்தை எப்படி நோக்குகிறேன் என்பதை நான் வளர்ந்த சூழல் தீர்மானித்தது. எதிர்காலம் நோக்கியுள்ள பெரிய பிரச்னைகளுக்கு மூத்த தலைமுறையினர் தீர்வு காணாததே நான் இப்போது அரசியல் களத்தில் செயல்பட வேண்டிய உடனடித்தேவை உள்ளது. இது மற்றவருடைய பணி என்று ஒதுக்கிவிட என் மனம் ஒப்பவில்லை' என்றும், 'அனைத்து மகளிருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஐரோப்பாவின் முதல் நாடு என்ற பெருமையுடையது பின்லாந்து' ஆகவே பெண் சக்தியை பெருமையுறச்ச செய்வேன் என்று சூளுரைத்தார் உலகின் இளம் வயது பிரதமர் சன்னா மரின். 

 

காஜா கல்லாஸ் :சீர்திருத்தக் கட்சித் தலைவர் காஜா கல்லாஸ் எஸ்டோனியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் முதல் முறையாக ஒரு பெண் பிரதமரால் வழிநடத்தப்படும். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இப்போது அவர் கையெழுத்திட்டுளார். ஊழலில் சரிந்த முந்தைய அமைச்சரவையை புதிய அரசாங்கம் மாற்றியுள்ளதாக எஸ்டோனியா மக்கள் கூறிவருகின்றனர். இனி வரும் காலங்களில் காஜா கல்லாஸின் பெயரை உலகம் உச்சரிக்க தொடங்கும். எஸ்டோனியாவின் பிரதமர் காஜா கல்லாஸ், ஜனவரி 26, 2021 அன்று பதியேற்றுக்கொண்டார்.

 

ஆங் சான் சூகி:மியான்மர் அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி இருந்து வருகிறார். அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இவரது அறிவுறுத்தலின்பேரில் தான் இயங்கி வருகின்றன. மியான்மர் அரசின் சார்பில் ஆங் சான் சூகி சர்வதேச நீதிமன்றங்களில் ஆஜராகி வாதாடியும் வருகிறார். மியான்மரின் மாநில ஆலோசகராக ஆங் சான் சூகி (Aung San Suu Kyi), ஏப்ரல் 6, 2016 முதல் பதவியில் இருக்கிறார். 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசையும் இவர் பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு வரை, 15 ஆண்டுகளாக தன்னை வீட்டுக்காவலில் வைத்திருந்த ராணுவத்தையே இப்போதும் சூகி ஆதரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கு இணையாக பேசப்பட்டவர் சூகி. 2015ஆம் ஆண்டு நடைபெற தேர்தலில் அவரது ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இவரை மியான்மரின் பெண் சிங்கம் என்றும் பலரும் அழைப்பதுண்டு.

 

மையா சண்டு :மால்டோவா குடியரசு கிழக்கு ஐரோப்பாவில், நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடாகும். இதன் மேற்கே ருமேனியாவும், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உக்ரேனும் அமைந்துள்ளன. மால்டோவாவின் அதிபராக மையா சண்டு, டிசம்பர் 24, 2020 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். அரசியலில் செயற்கரிய பல செயல்களை செய்த மையா சண்டு, மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் தலைவராகவும் உள்ளார். 2012 முதல் 2015 வரை அவர் மால்டோவாவின் கல்வி அமைச்சராக பணியாற்றினார். நடாலியா கெர்மன் மற்றும் சிரில் கபுரிசி ஆகியோருக்கு அடுத்தபடியாக மால்டோவாவின் அடுத்த பிரதமராக இவர் நியமனம் பெற்றுள்ளார்.

 

ஜெசிந்தா ஆர்டன் :ஜெசிந்தா கேட் லாரல் ஆர்டன் என்பதுதான் இவரது முழுப் பெயர். நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் இவர்தான். 37வது வயதில் முதல் முறையாக பிரதமராகினார். 1850களில் இருந்து பார்த்தால், இவ்வளவு இளம் வயதில் நியூசிலாந்தின் பிரதமரானது இவர்தான். பிரதமராக பதவியேற்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவர் தனது கட்சியின் தலைவராக கூட இல்லை, என்பதை வைத்தே அவரது அபார வளர்ச்சியை அறியலாம். ஜெசிந்தா பிரதமராக பதவியேற்ற பிறகுதான் அவர் குழந்தை பெற்றுக் கொண்டார். இதன் மூலம், நியூசிலாந்து வரலாற்றில், மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இவர்தான். ஆனால், தன்னை ஒரு ஸ்பெஷல் பெண் என்று யாரும் கூறுவதை அவர் விரும்பவில்லை. "நான் ஒருவித அதிசயப் பெண் என்ற எண்ணத்தை ஒருபோதும் கொடுக்க நான் விரும்பவில்லை," என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர்தான் ஜெசிந்தா.

 

இங்க்ரிடா சிமோனைட்:

லித்துவேனியக் குடியரசு  வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. தென் கிழக்குக் கரையில் பால்ட்டிக் கடலையும், வடக்கே லாத்வியாவும், தென்கிழக்கே பெலாரசும், தென்மேற்கே போலந்தும், உருசியாவையும் இந்நாடு எல்லைகளாக கொண்டுள்ளது. லிதுவேனியா பெண் தலைமைத்துவத்தின் வலுவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில் லிதுவேனியாவின் ஜனாதிபதியாக இங்க்ரிடா சிமோனைட் , நவம்பர் 25, 2020 அன்று பதவியேற்றுக்கொண்டார். இப்போது இவரது அமைச்சரவையும் பெண்களால் கட்டி எழுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ஷேக் ஹசினா :

வங்க தேச மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக ஷேக் ஹசீனா மக்களால் பலரால் பாராட்டப்படுகிறார். 1996-2001 வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா. கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது முறையாக பிரதமரானார். வங்க தேசத்தில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், ஏழைளுக்கு வீடு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களை ஷேக் ஹசீனா அமலாக்கி வருகிறார். ஆசியாவின் பெண் சக்தியாக இவர் அறியப்படுகிறார்.

 

ஏஞ்சலா மேர்க்கெல் :

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தல் உள்ளிட்ட பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் தலைமைப்பண்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் தலைவர் தன் நாட்டு மக்களிடம் கேட்க அஞ்சும் அளவை விட அதிகமாக கேட்டு பெற்றுள்ளார் ஏஞ்சலா மெர்கல் என புகழாரம் சூட்டியுள்ளது டைம் இதழ். இவர் அசாத்திய முடிவுகளை எடுப்பதில் கைதேர்ந்தவர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Women achievers

அடுத்த செய்தி