Home /News /international /

குறைப்பிரசவமான பெண்ணுக்கு கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில் - அமெரிக்காவில் அதிர்ச்சி!

குறைப்பிரசவமான பெண்ணுக்கு கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில் - அமெரிக்காவில் அதிர்ச்சி!

கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில்

கோடிக்கணக்கில் வந்த மருத்துவமனை பில்

ப்ரீமெச்சூர் பேபியை அதாவது குறைமாத குழந்தையை பெற்றெடுத்த காரணத்திற்காக தனக்கு சுமார் 5,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.12 கோடி) ஹாஸ்பிடல் பில் வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
நம்மில் பலர் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது மருத்துவமனை பில்களை பற்றி புகார் செய்திருப்போம். ஆனால் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனை பற்றி அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்த புகார் பலர் மத்தியில் வியப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ப்ரீமெச்சூர் பேபியை அதாவது குறைமாத குழந்தையை பெற்றெடுத்த காரணத்திற்காக தனக்கு சுமார் 5,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.12 கோடி) ஹாஸ்பிடல் பில் வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி அடைந்து புகார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் 38 வயதான பிஸ்ஸி பென்னட் (Bissi Bennet. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திடீரென சொன்ன தேதிக்கு முன்கூட்டியே இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிஸ்ஸிக்கு போகும் வழியில் காரிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது சாதாரணமாக இல்லாமல் குழந்தையின் தலை கடைசியாக வெளியே வந்தது.

மேலும் குழந்தை அழாததால் பிஸ்ஸியும் அவரது கணவரும் முதலில் கவலைப்பட்டாலும், 2 மாத மருத்துவமனை வாசத்திற்கு பிறகு அந்த குழந்தை 2021 ஜனவரி 7-ல் தேதி வீட்டிற்குச் செல்ல கூடிய தகுதியை பெற்றது. இந்த குழந்தைக்கு டோரியன் பென்னட் எனவும் பெயரிடப்பட்டது. பெற்றோர்களால் டோரியன் என்று பெயரிடப்பட்ட குழந்தை, இப்போது ஒரு வயதுக்கு மேலாகி மற்றும் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளது. இருந்தாலும் குறைபிரசவத்தில் பிறந்ததால், பிறந்ததில் இருந்து சுமார் 50 நாட்களுக்கு மேல் குழந்தைக்கு 'அதிக தொழில்நுட்ப, உயிர்காக்கும் சுவாசம் மற்றும் ஊட்டச்சத்து பராமரிப்பு' என குழந்தையின் உறுப்புகள் சரியாக முதிர்ச்சியடையும் வரை வழங்கப்பட்டது.

ALSO READ |  டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

இதனிடையே இன்ஷுரன்ஸ் துறையில் பணிபுரியும் பென்னட், குழந்தை டோரியன் மருத்துவமனையில் இருந்த போது வீட்டிற்கு அருகாமையில் இருந்ததால் அட்வென்ட் ஹெல்த் ஆர்லாண்டோ மெடிக்கல் சென்டரை தேர்ந்தெடுத்துள்ளார்.மேலும் அது அவரது இன்ஷுரன்ஸ் நெட்வொர்க்கில் இருந்துள்ளது. இதற்கிடையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை டோரி சிகிச்சை பெற்று வந்த போது, தாய் பிஸ்ஸி-யின் நிறுவனம் ஊழியர்களுக்கான ஹெல்த் பாலிசிகளை யுனைடெட் ஹெல்த்கேரிலிருந்து, UMR என்ற வேறு ஒன்றுக்கு மாற்றியதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது பில்லிங்கில் பெரிய பிழை ஏற்பட வழிவகுத்தது.2020 மற்றும் 2021 ஆகிய 2 பாலிசிகளுக்கும் சேர்த்து மருத்துவமனை பில்லிங் செய்ததால், ஹெல்த் இன்சூரன்ஸ் பிளான்களில் ஏற்பட்ட நிர்வாகப் பிழையின் விளைவு தான் இவ்வளவு பெரிய தொகையை பில்லாக பெற்றுள்ளார் பிஸ்ஸி பென்னட். இதில் உச்சகட்டமாக 2 காப்பீட்டு நிறுவனங்களும் பிழையின் காரணமாக பில் செலுத்த மறுத்துவிட்டன.நிர்வாகப் பிழை காரணமாக 2 நிறுவனங்களின் ஹெல்த் இன்ஷுரன்ஸ் தொகையும் இழந்ததால், இறுதியில் மொத்த தொகையும் பிஸ்ஸி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் அவர் மருத்துவமனையை அணுகி பிழையை பற்றி கூறி இருக்கிறார். ஆனால் மீண்டும் அதே பில் மாதத்திற்கு $46,000 கட்டணம் செலுத்தும் பிளானுடன் அனுப்பப்பட்டது.

ALSO READ |  ஜிகாதிகளுக்கு ஆதரவாக பிரசங்கம் - மசூதியை மூட உத்தரவு

பில் கட்டினாரா?

எனினும் தொடர்ந்து இதற்காக முட்டி மோதிய பிஸ்ஸி பென்னட்டின் தொடர் முயற்சியால், அதிர்ஷ்டவசமாக AdventHealth Orlando ஹாஸ்பிடல் கடந்த அக்டோபரில் பில்லை திருத்தியது. மேலும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை மருத்துவமனை 2020-ஆம் ஆண்டிற்கான பில்லை பெறவில்லை என கூறி மன்னிப்பு கேட்டது.'பில்லிங் மற்றும் தகவல்தொடர்பு செயல்முறையை' மேம்படுத்த தங்கள் அமைப்பில் உள்ள குறைகளை அடையாளம் காண இந்த விவகாரம் உதவி இருப்பதாக மேலும் இந்நிறுவனம் கூறியது. இறுதியாக பில் 300 டாலராக அப்டேட் செய்யப்பட்டது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Hospital

அடுத்த செய்தி